ஐந்தாவது நாளாக இன்றும் நிலக்கரி சுரங்க விவகாரத்தில் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் பாரதீய ஜனதா முடக்கியது. அந்த அமளிகளுக்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் இரு அவைகளிலும் விளக்கம் அளித்தார். அப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்து அறிக்கை சமர்பித்த மத்திய கணக்கு தணிக்கை குழுவினரைப்பற்றி சந்தேகப்படும் கேள்விகளை கேட்டார்.
பின்னர் பாராளுமன்றத்தை விட்டு வெளியே வந்த பிரதமர், உருது பழமொழியை உதாரணம் காட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எனது மவுனம் ஆயிரம் பதில்கள் கூறுவதைவிட சிறந்தது. எனவே உங்களின் கேள்விகளை புறந்தள்ளுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உண்மையில் உங்களின் கேள்விகளை உள்ளூர மதிக்கிறேன் என்பது தான் இதன் அர்த்தம்.
No comments:
Post a Comment