நெல்சன்மாணிக்கம் ரோடு மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைத்து அண்ணாநகர் செல்லும் பாதையில் 2 மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி, பிரமாண்டமான அண்ணா ஆர்ச் இடிக்கப்படுகிறது.
27 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணா ஆர்ச் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரையின் 75-வது பிறந்த நாளையொட்டி கட்டப்பட்டது. 40 டன் எடை கொண்ட அண்ணா ஆர்ச் 2 வளைவுகளாக சென்னையின் அடையாள சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்து வந்தது. இதை இடித்து அப்புறப்படுத்த ரூ.8 லட்சம் செலவிடுவதற்கான திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு இடிக்கும் பணி தொடங்குகிறது. பக்கத்தில் ஆஸ்பத்திரிகள் இருப்பதால் மொத்தமாக இடித்து சாய்க்காமல் சிறு சிறு துண்டுகளாக உடைத்து அகற்ற திட்டமிட்டுள்ளனர். எனவே 2 நாளில் முற்றிலும் இடித்து அகற்றப்படும். நெடுஞ்சாலைத்துறையினர் அண்ணா ஆர்ச்சின் புகைப்படம், மற்றும் வீடியோ காட்சிகளை பதிவு செய்து வைத்துள்ளனர்.
மேம்பால பணிகள் முடிந்ததும் மாநகராட்சி சொல்லும் இடத்தில் அண்ணா ஆர்ச் கட்டப்படும் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமைக்கு பிறகு அண்ணா ஆர்ச் இருந்ததற்கான அடையாள சுவடே இல்லாமல் ஆகிவிடும். இது பலருக்கு வருத்தம் அளிக்கிறது. இருந்தாலும் அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அவசியம். அதற்காக ஒரு அடையாள சின்னத்தை இடிப்பது தவறு அல்ல என்கிறார்கள். அந்த பகுதி வாசிகள். மேம்பாலம் மற்றும் சுரங் கப்பாதை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி விட்டன.
30 சதவீதம் நிலம் கையகப்படுத்தல் முடிந்துள்ளது. பூமிக்கு அடியில் செல்லும் கேபிள் மற்றும் குடிநீர் குழாய்களை அகற்றிய பிறகு அடுத்த மாதம் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment