கோவையில்
தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து
கொன்ற அண்ணன் சிறையிலிருந்து ஜாமீனில்
வெளிவந்து தற்கொலை செய்து கொண்ட
சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி. கட்டிடத் தொழிலாளியான
இவர் கடந்தாண்டில் தனது தாய், தந்தை
மற்றும் 21 வயது தங்கையுடன் ரத்தினபுரி
பகுதியில் வசித்து வந்தார்.
வழக்கமாக வேலை முடிந்ததும் குடித்துவிட்டு
வீட்டுக்கு செல்லும் வழக்கமுள்ள இவர் சம்பவத்தன்று குடித்துவிட்டு
போதையில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக
இருந்த, தனது தங்கையை பாலியல்
பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த
தங்கையின் கழுத்தை நெரித்து கொலை
செய்துள்ளார்.
இதுகுறித்து
தகவலறிந்த இரத்தினபுரி போலீசார் இவரை கைது செய்து
கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்த
இவர், இரத்தினபுரி பகுதியில் இருந்த வீட்டை காலி
செய்துவிட்டு சீரநாயக்கன்பாளையம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில்
குடியேறினார்.
இவர் மீதான வழக்கு விசாரணை,
கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது.
இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக
இருந்த ரவி தனது தாயின்
சேலையால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாய்க்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில்,
"அன்புள்ள அம்மாவுக்கு... நான் உங்களை பிரியும்
நேரம் வந்துவிட்டது. இப்போது சாகப்போகிறேன். எனக்காக
கவலைப்பட வேண்டாம். அடுத்த ஜென்மத்திலாவது உங்கள்
பெயரை கெடுக்காத உயிராக வருவேன்" என
குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஆர்.எஸ். புரம்
போலீசார் கூறுகையில், "ரவி ஜாமீனில் வெளிவந்தபின்,
தனது நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் தன்னை
புறக்கணிப்பதாகவும், அவர்களை பார்க்கவே, அவமானமாக
இருப்பதாகவும் புலம்பி வந்துள்ளார்.
மேலும்,
தான் செய்த கொடூரச் செயலை
எண்ணி மனம் வெதும்பி அதற்கான
தண்டனையை, தனக்குத் தானே விதித்துக் கொள்வதாகவும்
கூறிவந்துள்ளார். மேலும், இவரது தற்கொலை
குறித்து விசாரித்து வருகின்றோம்" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய சூடான செய்திகள் ....

No comments:
Post a Comment