ராஜா ராணி', 'ஆரம்பம்' படங்களில்
நயனின் ரீ என்ட்ரி கணக்கு
கனமாகவே தொடங்கியது. அடுத்து உதயநிதியுடன் கதிர்வேலன்
காதல் படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து மீண்டும் அவருடனே ‘நண்பேன்டா'வில் நடிக்கிறார். சிம்புவுடன்
‘இது நம்ம ஆளு‘, சூர்யாவுடன்
‘மாஸ்', ஜெயம் ரவியுடன் ‘தனி
ஒருவன்', விஜய் சேதுபதியுடன் ‘நானும்
ரவுடிதான்' என வரிசைகட்டி வாய்ப்புகளை
அள்ளிக்கொண்டிருக¢கிறார். டாப்பு டக்கராக
போய்க்கொண்டிருக்கும் நயனின் சினிமா ராஜ்ஜியத்தை
கண்டு கடுப்பான சில ஹீரோயின்கள் அஜீரண
கோளாறில் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் டபுள் ஹீரோயின் கதையில்
நடித்தால் அதில் தனது வேடம்தான்
கனமாக இருக்க வேண்டும் என
நயன் கண்டிஷன் போடுகிறாராம்.
உடன் நடிக்கும் இன்னொரு ஹீரோயினுக்கு எத்தனை
காட்சி, எத்தனை பாடல், எந்தவிதமான
காஸ்டியூம் என்றெல்லாம் கேட்கிறாராம். மற்றொரு ஹீரோயினுக்கு கொஞ்சம்
முக்கியத்துவம் இருந்தாலும் தான் படத்தில் நடிக்க
முடியாது என்கிறாராம். இதனாலேயே 'மாஸ்' படத்திலிருந்து எமி
ஜாக்சன் தூக்கப்பட்டாராம். நயனுக்கு போட்டியாளராக இப்போது இருப்பவர் அனுஷ்காதான்.
ரஜினியுடன் 'லிங்கா', அஜீத்துடன் 'என்னை அறிந்தால்' படங்களில்
டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டில்தான் அவர் நடிக்கிறார். ஆனால்
தனக்குதான் முக்கியத்துவம் தர வேண்டும் என
எந்த வீம்பும் செய்வதில்லையாம். 'என்னை அறிந்தால்' படத்தில்
திரிஷாவுக்கும் 'லிங்கா'வில் சோனாக்ஷிக்கும்
அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். இருந்தாலும் மற்ற ஹீரோயின்களின் விஷயத்தில்
தலையிடாமலும் டைரக்டர் சொல்படி கேட்பதிலும் நயனைவிட
அனுஷ்காவே பெஸ்ட் என சினிமா
யூனிட்காரர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
இன்றைய சூடான செய்திகள் ....

No comments:
Post a Comment