அஜித்,
அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கௌதம்
மேனன் இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கும்
படம் 'என்னை அறிந்தால்'.
சமீபத்தில்
வெளியான இப்படத்தின் டீசர் அடுத்தடுத்து பல
சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தற்போது டீசர் லைக்குகளில்
அனைத்து பாலிவுட் படங்களின் சாதனைகளையும் முறியடித்து இந்திய அளவில் முதல்
இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளால் என்னை அறிந்தால் படத்தின்
ஒரு பாடல் மட்டும் முன்கூட்டியே
வெளியிடப் பட இருப்பதாக படத்தின்
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சமூக
வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் கூறியதாவது, “என்னை அறிந்தால்' படத்திற்காக
நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க
நன்றி. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை விரைவில்
வெளியிட உள்ளோம்,” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா
வரும் 18ம் தேதி நடைபெற
உள்ளது. அஜித் ரசிகர்களுக்கு 'என்னை
அறிந்தால்' பொங்கல் பரிசாக அமையும்
என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இன்றைய சூடான செய்திகள் ....

No comments:
Post a Comment