ஆஸ்திரேலியா
: நாளை தொடங்க உள்ள அடிலெய்ட்
டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணியில், பவுன்சர் பந்து தாக்கி மரணமடைந்த
பிலிப் ஹியூக்ஸ்-ன் பெயர் 13 வீரராகச்
சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியா
- ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் நான்கு
போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர்
டெஸ்ட் தொடர் நாளை அடிலெய்ட்
நகரில் தொடங்குகிறது. முன்னதாக இப்போட்டிகள் கடந்த 4ம் தேதி
பிரிஸ்பேனில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால்,
எதிர்பாராதவிதமாக பவுன்சர் பந்து தாக்கி ஆஸ்திரேலிய
வீரர் பிலிப் ஹியூக்ஸ் உயிரிழந்ததை
அடுத்து டெஸ்ட் அட்டவணை திருத்தி
அமைக்கப்பட்டது. எனவே, இதன்படி நாளை
முதல் போட்டி அடிலெய்ட் நகரில்
தொடங்குகிறது.
இந்த போட்டியில், ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்
விளையாடுகிறார். மேலும், ஆஸ்திரேலிய அணியில்,
வழக்கம் போல் அனுபவமிக்க பீட்டர்
சிடில், ரியான் ஹேரிஸ், மிட்செல்
ஜான்சன் ஆகியோருடன் களமிறங்குகின்றனர்.
அதோடு,
மறைந்த கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸிற்கு
கவுரவம் செய்யும் விதமாக அவரது பெயர்
போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பெயர் பட்டியலில் 13-வது
வீரராகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்படி,
நாளை விளையாட உள்ள ஆஸ்திரேலிய
அணியில் உள்ள வீரர்களின் பெயர்கள்
பின்வருமாறு:
டேவிட் வார்னர், கிறிஸ்
ரோஜர்ஸ், ஷேன் வாட்சன், மைக்கேல்
கிளார்க், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல்
மார்ஷ், பிராட் ஹேடின், மிட்செல்
ஜான்சன், ரியான் ஹேரிஸ், பீட்டர்
சிடில், நேதன் லயன், ஜோஸ்
ஹேசில் உட் (12-வது வீரர்),
பிலிப் ஹியூக்ஸ் (13வது வீரர்).
இன்றைய சூடான செய்திகள் ....

No comments:
Post a Comment