இந்திய
அணியின் கேப்டன் மகேந்திர சிங்
டோனி, விரல் காயத்தால் அவதிப்படுவதால்,
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்டில்
அவர் விளையாட வாய்ப்பு இல்லை.
எனவே இந்திய அணியின் கேப்டனாக
அணியை விராட் கோலி வழிநடத்துகிறார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள்
கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது
டெஸ்ட் அடிலெய்டில் நாளை தொடங்குகிறது. டோனி
விரல் காயத்தால் அவதிப்பட்டதால் முதலாவது டெஸ்டில் இந்திய அணியின் விராட்
கோலி கேப்டனாக செயல்பட இருந்தார். ஆனால்
யூக்சின் மரணத்தால் முதலாவது டெஸ்ட் 5 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே
டோனி கடந்த சனிக்கிழமை அணியுடன்
இணைந்து விட்டார். இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில்
இந்திய கேப்டன் டோனி விளையாட
வாய்ப்பிருப்பதாக சகவீரரான ஷிகர்தவான் தெரிவித்தார்.
இந்நிலையில்
டெஸ்ட் போட்டிக்கு முன்னதான செய்தியாளர்கள் சந்திப்பின்போது வீராட் கோலி பேசுகையில்,
“ஆம், நான் தான் நாளை
இந்திய அணியினை வழிநடத்துகிறேன்,” என்று
கூறினார். விராட் கோலி தலைமையிலான
இந்திய அணி, இலங்கை மண்ணில்
சமீபத்தில் ஒருநாள் போட்டித் தொடரை
வென்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை
முதல்முறையாக விராட் கோலி வழிநடத்துகிறார்.
தலையில் காயம் அடைந்து பிலிப்
ஹூயூக்ஸ் எதிர்பாரத மரணத்தால் ஆஸ்திரேலிய வீரர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மைக்கேல்
கிளார்க் விளையாடுகிறார்.
ஆஸ்திரேலியா
கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன்
பேசுகையில், “கிளார்க் மீண்டும் வருவது, எங்களுக்காக கேப்டன்
பொறுப்பில் இருந்து விளையாடுவது மிகவும்
ஊக்குவிப்பதாக இருக்கும்,” என்றார். கிளார்க் மிகவும் வலிமையான தலைவர்
மற்றும் எப்போதும் வலியை ஏற்றுக் கொள்ளும்
தலைவர்... அவர் கேப்டனாக இல்லாதபோதுதான்
அவரைபற்றி தெரியும், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே காயத்தால் அவதியுற்ற மைக்கேல் கிளார்க், பிலிப் ஹூயூக்ஸ் எதிர்பாரத
மரணத்தால் மிகவும் கவலைக்குள்ளாகினார். பிலிப்
ஹியூக்சின் இறுதிச்சடங்கில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கின்
இரங்கல் உரை அனைவரையும் நெகிழ
வைத்தது.
இன்றைய சூடான செய்திகள் ....

No comments:
Post a Comment