ஊர் உலகமெங்கும் ஒரே பேச்சாக இருக்கும்
லிங்கா படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர்
என்ன தெரியுமா?
வெங்கண்ணா...
ஆனால் இந்தத் தலைப்பை கேட்ட
உடனே நிராகரித்துவிட்ட, ரஜினி, தானே சூட்டிய
பெயர்தான் லிங்கா. ரஜினிக்கு இந்தக்
கதையை பொன் குமரன் சொன்னதுமே,
சட்டென்று பிடித்துப் போய் உடனே ஆரம்பிச்சிடலாம்
என்று களமிறங்கிவிட்டாராம்.
அடுத்து
படத்தின் டைட்டில். இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இந்தப்
படத்துக்கு முதலில் சூட்டிய பெயர்
வெங்கண்ணா. இதை ரஜினியிடம் அவர்
கூறியதும், 'நல்ல பவர்புல்லாதான் இருக்கு..
ஆனா இந்தத் தலைப்பு வேண்டாம்,"
என்று கூறிவிட்டாராம் ரஜினி.
அடுத்த
என்ன தலைப்பு என்று ரவிக்குமார்
யோசிக்கும் முன் ரஜினியே சொன்ன
தலைப்புதான் லிங்கா.
இது ரஜினியின் பேரன்
பெயர்.. அதனால்தான் வைத்துவிட்டார் என்று யாராவது நினைத்தால்
அது தப்பு... காரணம் கதை சொல்லும்போதே
கதையின் நாயகன் பெயர் லிங்கேஸ்வரன்
என்றே சொல்லியிருக்கிறார்கள்.
எனவே அந்த லிங்கேஸ்வரனைத்தான் லிங்காவாக்கிவிட்டாராம்
ரஜினி. லிங்கா என்ற பெயரை
தலைப்பாக்கிவிட்டு, படத்தில் இடம்பெறும் அணையைத் தேடியுள்ளனர்.
அப்போதுதான்
ஷிமோகாவில் உள்ள ஒரு பெரிய,
இதுவரை பெரிதாக வெளியில் தெரியாத
ஒரு அணையைப் பார்த்துள்ளனர். அணையின்
பெயர் லிங்கனமகி!
இன்றைய சூடான செய்திகள் ....

No comments:
Post a Comment