நடிகர்
ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில நடித்து
குறித்து தனது அனுபவங்களை நடிகை
சோனாக்ஷி சின்ஹா பகிரிந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
அப்போது அவர் கூறியதாவது:
குண்டு
பெண்ணாக இருந்த நான் சினிமாவில்
நடிப்பேன் என்று நினைத்து பார்த்ததே
இல்லை. நடிகர் சல்மான் கான்
தபான் படத்தில் நடிக்குமாறு என்னை அழைத்தார். அப்போது
நிறைய பேர் கிண்டல் செய்தனர்.
படத்தில் ஒப்பந்தமானபின், என்னிடம் பேசிய சல்மான் கான்
எனது எடையை 30 கிலோ குறைக்க வேண்டும்
என்று கூறினார்.
இதனையடுத்து வீட்டிலேயே
ஜிம் அமைத்து. இரவு பகலாக உடற்பயிற்சி
செய்தேன்... உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தேன்..
40 நாளில் 30 கிலோ குறைத்தேன். அதைப்
பார்த்த சல்மான்கானே என்னை வெகுவாக பாராட்டினார்.
அந்த படம் ரிலீஸ் ஆனபின்
எனது நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.
அப்போது தான் நான் ஒருவருக்கு
அழகைவிட தன்னம்பிக்கைதான் முக்கியம் என்பதை உணர்ந்தேன்..
ரஜினிகாந்த்
படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும்
எனது அப்பா (சத்ருகன்சின்ஹா) மிகுந்த
சந்தோஷம் அடைந்தார். ரஜினியுடன் நான் நடிக்கிறேன் என்றதும்
எனது அப்பா அவரை புகழ்ந்து
தள்ளினார். ரஜினிகாந்த் கடுமையான உழைப்பாளி, எளிமையானவர், கட்டுப்பாடுமிக்கவர், பக்திமான் என்று அடுக்கிக்கொண்டே போனார்.
உங்கள் நண்பர் ஆச்சே? எப்படி
விட்டு கொடுப்பீர்கள்? என்று நான்கூட கேலி
செய்தேன்.
ஆனால் ரஜினியுடன் நடித்தபோது தான் அப்பா, அவரை
கூறியது எவ்வளவு உண்மையானது என்பது
புரிந்து கொண்டேன்.
ரஜினியுடன்
நடிக்கும் போது முதலில் எனக்கு
வெட்கமாக இருந்தது. ரஜினி தான் எனக்கு
உற்சாகப்படுத்தினார்.. எனது நண்பர் மகளுடன்
காதல் காட்சியில் நடிக்க நான்தான் வெட்கப்பட
வேண்டும். நீ வெட்கப்படுகிறாயே எனக்
கூறி எனக்கு தைரியப்படுத்தினார்.
நடிக்கும்போது
பெரியவர்கள், சிறியவர்கள் என்று பார்க்ககூடாது என்று
அறிவுரை வழங்கினார். எனது நடிப்பை ரஜினிகாந்த்
பாராட்டி உற்சாகப்படுத்தினார். எனக்கு தெரியாததை சொல்லி
கொடுத்தார். லிங்கா படத்தில் 1940–ம்
ஆண்டு நடக்கும் கதையின் கதாநாயகி என்பதால்
ஜாக்கெட் இல்லாமல் என்னை நடிக்க சொன்னார்கள்.
70 ஆண்டுகளுக்கு முந்தைய பெண் என்பதால்
ஜாக்கெட் இல்லாமல் நடித்தேன். நீச்சல் உடையில் கூட
நடித்து விடலாம். ஆனால் ஜாக்கெட் இல்லாமல்
நடித்தது வெட்கமாக இருந்தது. அதன்பின் பழகி விட்டது. அந்த
வேடத்தில் எனக்கு பேச்சு குறைவு.
கண்களாலே பேசி நடிக்க வேண்டும்.
எனது நடிப்பை ரஜினிகாந்த் பாராட்டினார்.
இதனை ஒரு சவாலாக செய்து
முடித்தேன். படம் ரிலீஸ் ஆன
பின் என்னை தென்னிந்திய நடிகை
என்று எல்லோரும் பாராட்டுவார்கள் என்றார்.
இன்றைய சூடான செய்திகள் ....

No comments:
Post a Comment