தமிழ்நாடு மருத்துவர் சமூக மத்திய சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவற்றின் ஒக்கியம் துரைப்பாக்கம் கிளைசார்பில் அதன் தலைவர் ரவிசங்கர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:
மனிதர்களுக்கு முடிதிருத்துவதும் அழகு கலையாக்கல் தொழிலை பரம்பரையாக செய்து வருகிறோம். எங்கள் சாதியைச்சேர்ந்தவர்கள் 40 லட்சம்பேர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஓசூர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் ஜானை ஆதரித்து விஜயகாந்த் வேனில் பிரசாரம் செய்யும்போது, காங்கிரஸ் தொண்டனுக்கு சீட் கொடுக்காமல் பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணுக்கு சீட் வழங்கியுள்ளார். இவர்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால் நாட்டை சுடுகாடாக்கி மாற்றிவிடுவார்' என குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் சமூகத்தை கேவலப்படுத்தி உள்ளார் விஜயகாந்த். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment