எழுத்தாளர் அருந்ததி ராய், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி ஆகியோரின் தேசவிரோத பேச்சு தொடர்பான வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக டெல்லி போலீஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பான அறிக்கையை தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், திலக் மார்க் காவல் நிலைய அதிகாரி இன்று சமர்ப்பித்தார்.
கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அருந்ததி ராயும், கிலானியும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தில்லியைச் சேர்ந்த சுஷில் பண்டிட் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இன்று, இந்த வழக்கின் விசாரணை நீதிபதி நவிதா குமாரி பஹா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, தில்லி போலீஸார் தரப்பில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆதாரங்களை திரட்ட உதவுமாறு வழக்கின் மனுதாரரான சுஷில் பண்டிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment