அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் திமுகவினருடன் நெருக்கமாக இருந்து கட்சிக்கு விரோதமாக செயல்பட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் காங்கிரசில் சேர்ந்தார். மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட முதல் நபராக சென்று விருப்ப மனு தாக்கல் செய்தார். ஆனாலும் அவருக்கு சீட் கொடுக்கவில்லை.
அந்த தொகுதியில் தங்கபாலுவே போட்டியிடுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்.வி.சேகர், தங்கபாலுவை கடுமையாக விமர்சித்தார்.
இதனால் தங்கபாலு அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில் எஸ்.வி.சேகர் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’நான் கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. என்னை நீக்கியதற்கான காரணத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. நீக்கப்படும் முன் எனக்கு முறையான நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை.
கட்சியில் இருந்து நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை’’என்று கூறினார்.

No comments:
Post a Comment