ஹெட்லைன்ஸ் டுடே தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்தார் ரஜினி.
தேர்தலில் எதை மையமாக கருதுகிறீர்கள்?
தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பல பிரச்சனைகள் உள்ளன. அதில் மிகப் பெரியது, முக்கியமானது விலைவாசி உயர்வு. இதனால் ஏழைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் அடுத்து யார் முதல்வராக வந்தாலும் அதை முதலில் தீர்க்க வேண்டும். அடுத்த முதல்வராக யார் வந்தாலும், அவர் ஏழைகள் நலனைக் காக்கும், விவசாயிகள் நலன் காக்கும் முதல்வராக இருக்க வேண்டும்.
பொதுவாக நிலையான அரசும், மக்கள் நல அரசும் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தத் தேர்தல் மிகக் கடுமையான போட்டியைக் கண்டுள்ளது. யார் வருவார்கள் என்பதை கணிப்பது கஷ்டமாகத்தான் உள்ளது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.
அன்னா ஹஸாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்து?
"அன்னா ஹஸாரே ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். அவருடன் இணைந்து செயல்பட நான் ஆசைப்படுகிறேன்," என்றார்.
அரசியலில் உங்கள் பங்களிப்பு இனி வரும் காலங்களில் பெரிதாக இருக்குமா?
அது பற்றி வேணாம்... இப்போது அதுபற்றி பேசவும் விரும்பவில்லை. பார்க்கலாம்.
ஊழலுக்கு எதிராக நீங்கள் இயக்கம் எதுவும் ஆரம்பிப்பீர்களா?
அதான் அன்னா ஹஸாரே ஆரம்பித்துள்ளாரே... அதுவே போதும். அதில் நானும் இருப்பேன்.
யார் அடுத்த முதல்வராக வருவார்கள்?
அதை சொல்வது கஷ்டம், என்றார்.

No comments:
Post a Comment