விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, April 2, 2011

    உலகக் கோப்பையை வென்றது இந்தியா! - கோடிக்கணக்கான ரசிகர்கள் குதூகலம்!



    கேப்டன் தோனி இமாலய சிக்சர் அடிக்க...இந்திய அணி உலக கோப்பையை "சூப்பராக' கைப்பற்றி, வரலாறு படைத்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தோனி (91*) மற்றும் காம்பிரின் (97) அபார ஆட்டம், கோப்பை கனவுக்கு கைகொடுத்தது.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடந்தது. நேற்று மும்பையில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 
    ஸ்ரீசாந்த் வாய்ப்பு:
    இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட முரளிதரன் இடம் பெற்றார். இந்திய அணியில் காயமடைந்த நெஹ்ராவுக்கு பதிலாக ஸ்ரீசாந்த் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா, "பேட்டிங்' தேர்வு செய்தார்.

    ஜாகிர் துல்லியம்:
    இந்திய "வேகங்கள்' துவக்கத்தில் போட்டுத் தாக்க , இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. ஜாகிர் வீசிய முதல் இரண்டு ஓவர்களும் "மெய்டனாக' அமைந்தன. மறுபக்கம் ஸ்ரீசாந்தும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். 
    ஸ்ரீசாந்த் ஏமாற்றம்:
    "ரன் ரேட்' மிகவும் குறைய அதிரடிக்கு மாறினார் தில்ஷன். ஸ்ரீசாந்த் வீசிய போட்டியின் 6வது ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். படுமந்தமாக ஆடிய தரங்கா 2 ரன்களுக்கு(20 பந்து), ஜாகிர் பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த சங்ககராவும், ஸ்ரீசாந்த் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். ஹர்பஜன் சுழலில் தில்ஷன்(33) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அப்போது இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து தவித்தது.

    யுவராஜ் அபாரம்:
    பின் சங்ககரா, ஜெயவர்தனா இணைந்து பொறுப்பாக ஆடினர். அனுபவ வீரர்களான இவர்கள் துடிப்பாக ரன் சேர்த்தனர். இந்த நேரத்தில் யுவராஜ் சிங் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது சுழலில் முதலில் சங்ககரா(48) சிக்கினார். அடுத்து சமரவீரா(21), "ரிவியு' முறையில் வெளியேறினார். ஜாகிர் வேகத்தில் கபுகேதரா(1) காலியானார். 

    இரண்டாவது சதம்:
    அடுத்து வந்த குலசேகரா "கம்பெனி' கொடுக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் ஜெயவர்தனா. இவர்கள் "பேட்டிங் பவர்பிளேயை' பயன்படுத்தி அதிரடியாக ரன் சேர்த்தனர். ஜாகிர் வீசிய போட்டியின் 48வது ஓவரில் குலசேகரா ஒரு இமாலய சிக்சர்(87 மீட்டர் தூரம்) அடித்தார். மறுபக்கம் ஒரு பவுண்டரி அடித்த ஜெயவர்தனா, இத்தொடரில் தனது இரண்டாவது சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 14வது சதம். குலசேகரா (32) ரன் அவுட்டானார். ஜாகிர் வீசிய போட்டியின் 50வது ஓவரில் பெரேரா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, ஒட்டுமொத்தமாக 18 ரன்கள் கிடைத்தன. கடைசி 5 ஓவரில் மட்டும் 63 ரன்கள் எடுக்கப்பட, இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்öட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. ஜெயவர்தனா(103), பெரேரா(22) அவுட்டாகாமல் இருந்தனர்.
    மலிங்கா மிரட்டல்:
    அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே "ஷாக்' கொடுத்தார் மலிங்கா. இவரது இரண்டாவது பந்தில் சேவக் "டக்' அவுட்டானார். இது தொடர்பாக "ரிவியு' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. குலசேகரா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த சச்சின் நம்பிக்கை தந்தார். இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த மலிங்கா, சச்சினையும்(18) அவுட்டாக்கி பேரதிர்ச்சி கொடுத்தார். பிறந்த மண்ணில் 100வது சதம் காண்பார் என எதிர்பார்த்த நிலையில், உள்ளூர் ரசிகர்களின் நெஞ்சங்களை தகர்த்து, வெளியேறினார் சச்சின். 
    காம்பிர் அதிர்ஷ்டம்:
    பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து கலக்கலாக ஆடினர். காம்பிர் பக்கம் அதிர்ஷ்டம் அதிகமாகவே இருந்தது. இவர் 30 ரன்களில் இருந்த போது "கேட்ச்' வாய்ப்பை குலசேகரா நழுவிட்டார். பின் "ரன் அவுட்' வாய்ப்பிலும் தப்பிய இவர், ஒரு நாள் போட்டிகளில் தனது 25வது அரைசதம் கடந்தார். தில்ஷன் பந்தில் அவரது சூப்பர் "கேட்ச்சில்' விராத் கோஹ்லி(35) அவுட்டானார். 

    வெற்றி கேப்டன்:
    அடுத்து வந்த தோனி ஒத்துழைப்பு தர, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் காம்பிர். முதுகு வலியை பொருட்படுத்தாது "கேப்டன் இன்னிங்ஸ்' விளையாடிய தோனி, முரளிதரன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, ஒரு நாள் போட்டிகளில் தனது 38வது அரைசதம் கடந்தார். இந்த நேரத்தில் பெரேரா பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பர்(97) பரிதாபமாக போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். 
    இரண்டாவது கோப்பை:
    தொடர்ந்து பெரேரா பந்தை சிக்சருக்கு விரட்டிய தோனி, இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தினார். "பேட்டிங் பவர்பிளேயில்' யுவராஜும் பவுண்டரிகளாக விளாசி, வெற்றியை உறுதி செய்தார். குலசேகரா பந்தில் தோனி ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. தோனி(91), யுவராஜ்(21) அவுட்டாகாமல் இருந்தனர்.
    ஸ்கோர் போர்டு
    இலங்கை
    தரங்கா(கே)சேவக்(ப)ஜாகிர் 2(20)
    தில்ஷன்(கே)ஹர்பஜன் 33(49)
    சங்ககரா(கே)தோனி(ப)யுவராஜ் 48(67)
    ஜெயவர்தனா-அவுட்இல்லை- 103(88)
    சமரவீரா--எல்.பி.டபிள்யு.,(ப)யுவராஜ் 21(34)
    கபுகேதரா(கே)ரெய்னா(ப)ஜாகிர் 1(5)
    குலசேகரா-ரன்அவுட்(தோனி) 32(30)
    பெரேரா-அவுட்இல்லை- 22(9)
    உதிரிகள் 12
    மொத்தம் (50 ஓவரில், 6 விக்.,) 274
    விக்கெட் வீழ்ச்சி: 1-17(தரங்கா), 2-60(தில்ஷன்), 3-122(சங்ககரா), 4---179(சமரவீரா), 5-182(கபுகேதரா), 6-248(குலசேகரா).
    பந்துவீச்சு: ஜாகிர் 10-3-60-2, ஸ்ரீசாந்த் 8-0-52-0, முனாப் 9-0-41-0, ஹர்பஜன் 10-0-50-1, யுவராஜ் 10-0-49-2, சச்சின் 2-0-12-0, கோஹ்லி 1-0-6-0.
    இந்தியா
    சேவக்-எல்.பி.டபிள்யு.,(ப)மலிங்கா 0(2)
    சச்சின்(கே)சங்ககரா(ப)மலிங்கா 18(14)
    காம்பிர்(ப)பெரேரா 97(122)
    கோஹ்லி(கே)+(ப)தில்ஷன் 35(49)
    தோனி-அவுட்இல்லை- 91(79)
    யுவராஜ்-அவுட்இல்லை- 21(24)
    உதிரிகள் 15
    மொத்தம் (48.2 ஓவரில், 4 விக்.,) 277
    விக்கெட் வீழ்ச்சி: 1-0(சேவக்), 2-31(சச்சின்), 3-114(கோஹ்லி), 4-223(காம்பிர்).
    பந்துவீச்சு: மலிங்கா 9--0-42-2, குலசேகரா 8.2-0-64-0, பெரேரா 9-0-55-1, சூரஜ் ரந்திவ் 9-0-43-0, தில்ஷன் 5-0-27-1, முரளிதரன் 8-0-39-0.
    ஸ்ரீநாத் சாதனை சமன்
    நேற்று, இரண்டு விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், உலக கோப்பை அரங்கில் 23 போட்டிகளில் பங்கேற்று 44 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில், அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் வரிசையில், முதலிடத்தை முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்துடன் பகிர்ந்து கொண்டார். ஸ்ரீநாத், 34 போட்டிகளில் பங்கேற்று இந்த இலக்கை எட்டினார்.
    ஆறாவது வீரர்
    நேற்று, 33 ரன்கள் எடுத்த இலங்கையின் தில்ஷன், இம்முறை 9 போட்டிகளில் மொத்தம் 500 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், பத்தாவது உலக கோப்பை தொடரில் 500 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். தவிர, உலக கோப்பை அரங்கில், இம்மைல்கல்லை எட்டிய ஆறாவது வீரர் ஆனார். முன்னதாக இந்தியாவின் சச்சின் (673 ரன்கள், 2003), ஆஸ்திரேலியாவின் ஹைடன் (659 ரன்கள், 2007), இலங்கையின் மகிலா ஜெயவர்தனா (548 ரன்கள், 2007), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (539 ரன்கள், 2007), இந்தியாவின் சச்சின் (523 ரன்கள், 1996) உள்ளிட்டோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.

    28 ஆண்டுகளுக்கு பின்...
    நேற்று இலங்கையை வீழ்த்திய இந்திய அணி, இரண்டாவது முறையாக (1983, 2011) உலக கோப்பை வென்று சாதித்தது. முன்னதாக கடந்த 1983ல், கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை வென்றது. கடந்த 2003ல், கங்குலி தலைமையிலான இந்திய அணி, பைனல் வரை முன்னேறியது.
    வெற்றிக் கேப்டன்
    கேப்டன் தோனியின் வருகைக்கு பின், இந்திய அணிக்கு கோப்பை மழை பொழிகிறது. கடந்த 2007ல் இவரது தலைமையிலான இந்திய அணி, "டுவென்டி-20' உலக கோப்பை வென்று சாதித்தது. தற்போது 50 ஓவர் உலக கோப்பை வென்று இந்திய அணிக்கு மேலும் ஒரு பெருமை தேடித் தந்துள்ளார். தவிர, கடந்த ஆண்டு இவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கோப்பை வென்று தந்துள்ளார்.
    மூன்றாவது முறை
    நேற்று இலங்கை அணி நிர்ணயித்த 275 ரன்னை இந்திய அணி "சேஸ்' செய்தது. இதன்மூலம் இதுவரை நடந்துள்ள உலக கோப்பை பைனலில், மூன்றாவது முறையாக (1996, 99, 2011) "சேஸ்' செய்த அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. கடந்த 1975, 79, 83, 87, 92, 2003, 2007ல் நடந்த பைனலில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது.
    *
    கடந்த 1983ல் நடந்த பைனலில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஸ்ரீகாந்த் (38), சந்தீப் படீல் (27), மொகிந்தர் அமர்நாத் (26) உள்ளிட்டோர் கைகொடுக்க, 54.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை, மதன் லால் மற்றும் மொகிந்தர் அமர்நாத் தலா 3 விக்கெட் வீழ்த்தி போட்டுத்தாக்க, 52 ஓவரில் 140 ரன்களுக்கு சுருண்டது.
    தோனி "6000'
    நேற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் தோனி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் 6000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இவர், தனது 42வது ரன்னை கடந்த போது இச்சாதனை படைத்தார். இதுவரை 186 போட்டியில் பங்கேற்றுள்ள இவர் 6049 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய ஏழாவது இந்திய வீரர் ஆனார். முன்னதாக சச்சின், கங்குலி, டிராவிட், அசார், யுவராஜ், சேவக் உள்ளிட்டோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.
    காம்பிர் "4000'
    நேற்று, 97 ரன்கள் எடுத்த இந்திய வீரர் காம்பிர், சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், 4000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இவர் தனது 24வது ரன்னை கடந்த போது, இச்சாதனை படைத்தார். இதுவரை 114 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 9 சதம், 25 அரைசதம் உட்பட 4073 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 11வது இந்திய வீரர் ஆனார்.

    இரண்டு முறை சாம்பியன்
    நேற்று இலங்கையை வீழ்த்திய இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் இரண்டு அல்லது அதற்கு மேல் கோப்பை வென்ற அணிகள் பட்டியலில் இணைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக நான்கு முறை (1987, 99, 2003, 2007) கோப்பை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் (1975, 79), இந்தியா (1983, 2011) உள்ளிட்ட அணிகள் தலா இரண்டு முறை கோப்பையை கைப்பற்றின. பாகிஸ்தான் (1992), இலங்கை (1996) அணிகள் தலா ஒரு முறை கோப்பை வென்றன.
    முரளிதரன் ஏமாற்றம்
    நேற்று, தனது கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்ற இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், 8 ஓவர்கள் வீசினார். இதில் ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியவில்லை. இதுவரை 350 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 534 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதில் பத்து முறை ஐந்து அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஒருநாள் (534 விக்கெட்) மற்றும் டெஸ்ட் (800 விக்கெட்) போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
    தில்ஷன் முதலிடம்
    பத்தாவது உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள் வரிசையில் இலங்கையின் தில்ஷன் முதலிடம் பிடித்தார். இவர், 9 போட்டிகளில் பங்கேற்று 2 சதம், 2 அரைசதம் உட்பட 500 ரன்கள் எடுத்துள்ளார்.
    இவ்வரிசையில் "டாப்-10' பேட்ஸ்மேன்கள்:
    வீரர் போட்டி ரன்கள் சதம்/அரைசதம்
    தில்ஷன் (இலங்கை) 9 500 2/2
    சச்சின் (இந்தியா) 9 482 2/2
    சங்ககரா (இலங்கை) 9 465 1/3
    டிராட் (இங்கிலாந்து) 7 422 0/5
    தரங்கா (இலங்கை) 9 395 2/1
    காம்பிர் (இந்தியா) 9 393 0/4
    சேவக் (இந்தியா) 8 380 1/1
    யுவராஜ் (இந்தியா) 9 362 1/4
    டிவிலியர்ஸ் (தெ.ஆ.,) 5 353 2/1
    ஸ்டிராஸ் (இங்கிலாந்து) 7 334 1/1
    அப்ரிதி-ஜாகிர் மிரட்டல்
    இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் இருவரும் தலா 21 விக்கெட் கைப்பற்றினர்.
    இவ்வரிசையில் "டாப்-10' பவுலர்கள்:
    வீரர் போட்டி விக்கெட்
    அப்ரிதி (பாக்.,) 8 21
    ஜாகிர் (இந்தியா) 9 21
    சவுத்தி (நியூசி.,) 8 18
    ராபின் (தெ.ஆ.,) 7 15
    முரளிதரன் (இலங்கை) 9 15
    யுவராஜ் (இந்தியா) 9 15
    தாகிர் (தெ.ஆ.,) 5 14
    குல் (பாக்.,) 8 14
    ரோச் (வெ.இ.,) 6 13
    பிரட் லீ (ஆஸி.,) 7 13
    இரண்டாவது இந்தியர்
    உலக கோப்பை அரங்கில், கடந்த 1992ம் ஆண்டு முதல், தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் இதுவரை நியூசிலாந்தின் மார்டின் குரோவ் (1992), இலங்கையின் ஜெயசூர்யா (1996), தென் ஆப்ரிக்காவின் குளூஸ்னர் (1999), இந்தியாவின் சச்சின் (2003), ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (2007) உள்ளிட்டோர் தலா ஒரு முறை இவ்விருதை வென்றுள்ளனர். இம்முறை இந்தியாவின் யுவராஜ் சிங்கிற்கு இவ்விருது வழங்கப்பட்டது. இதன்மூலம், தொடர் நாயகன் விருது வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
    குவிந்த வி.ஐ.பி.,க்கள்
    உலக கோப்பை கிரிக்கெட்டின் பைனலைக் காண, நேற்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், காங்., பொதுச்செயலர் ராகுல் , இலங்கை அதிபர் ராஜபக்சே, மத்திய அமைச்சர் கபில் சிபல் என, பல பிரபலங்கள் மும்பை வான்கடேயில் குவிந்தனர். இவர்கள் தவிர, சச்சின் மகன் அர்ஜுன், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் போட்டியை காண திரண்டிருந்தனர்.


    சச்சினை வீழ்த்திய மலிங்கா
    மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல்., அணியின் கேப்டனாக இருப்பவர் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இவரது அணியின் நட்சத்திர பவுலர் இலங்கையின் மலிங்கா. நேற்றைய பைனலில் வேகத்தில் மிரட்டிய மலிங்கா முதலில் சேவக்கை "டக்' அவுட்டாக்கினார். 
    பிரார்த்தனை பலிக்கவில்லை
    இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை பைனலைக் காண, நேற்று மும்பை வந்திருந்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இடையில் திருப்பதி சென்று, இலங்கை அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தாராம். ஆனால், "திருப்பதி ஏழுமலையான்' இந்தியாவின் பக்கம் இருந்து, ராஜபக்சேயை கைவிட்டு, வெற்றியை நமக்கு கொடுத்துவிட்டார்.
    ஹூண்டாய் கார் பரிசு
    உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு, ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான "வெர்னா' என்ற காரை, பரிசாக தர முன்வந்துள்ளது. இதன் படி, சுமார் 7 முதல் 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒவ்வொரு வீரருக்கும் கிடைக்கிறது.
    சதம் அடித்தும் தோல்வி
    பொதுவாக உலக கோப்பை கிரிக்கெட்டின் பைனலில், எந்த அணியின் வீரர் சதம் அடிக்கின்றாரோ, அந்த அணி கோப்பை வெல்வது நிச்சயம். கடந்த 1996ல் இலங்கையின் அரவிந்த டிசில்வா (107*), 2003, 2007ல் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (140*), கில்கிறிஸ்ட் (149) அடித்த சதம் தான் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில் நேற்று இலங்கையின் ஜெயவர்தனா சதம் அடிக்க, சற்று பதட்டம் ஏற்பட்டது. கடைசியில் தோனி, காம்பிர் அசத்த இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    ரூ. 13.6 கோடி பரிசு
    உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, சாம்பியன் கோப்பையுடன், மொத்தம் ரூ. 44.1 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. தோல்வியடைந்த இலங்கை அணிக்கு ரூ. 6.75 கோடி கிடைத்தது.
    பெங்களூரு "வெறிச்'
    உலக கோப்பை தொடரின் பைனல் போட்டியை பார்க்க அனைவரும் வீடுகள், கடைகளில் "முடங்கி' விட்டதால், பெங்களூரு ரோடுகள் பாலைவனம் போல வெறிச்சோடின. முக்கிய "ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்', கிளப்புகள் மற்றும் கடைகளில் ஆட்கள் இல்லாமல் காற்று வாங்கின. ஒருசில கடைகளில் "டிவி'யில் ஒளிபரப்பப்பட்ட கிரிக்கெட்டை பார்க்க மட்டும் கூட்டமாக கூடி நின்றனர். பாகிஸ்தான் போட்டிக்குப் பின் இரண்டாவது முறையாக, மீண்டும் பல அலுவலகங்கள் முன்னதாகவே மூடப்பட்டன.
    "40'
    டிக்கெட் கேட்ட ராஜபக்சே
    இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான பைனலைப் பார்க்க, நேற்று மும்பை வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, தன்னுடன் பெரிய கூட்டத்தை கூட்டி வந்தார். இவருடன் ஒருசிலரை மட்டும் எதிர்பார்த்த மாநில அரசுக்கு இது பெரும் சிக்கலாகி விட்டது. தவிர, தனக்கு, கிரிக்கெட்டை பார்க்க 40 "பாஸ்' வேண்டும், என அடம்பிடிக்க, இந்திய வெளியுறவுத் துறைக்கு தர்மசங்கடமாகியது.
    ஜாகிர் கான் ஏமாற்றம்
    கடந்த 2003 உலக கோப்பை பைனலில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் ஓவரை ஜாகிர் கான் வீசினார். இதில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பின், நேற்றைய போட்டியின் முதல் ஓவரை ஜாகிர் கான் வீசினார். இம்முறை சுதாரித்த இவர், "மெய்டனாகி' வீசி அசத்தினார். ஆனால் கடைசியாக வீசிய, தனது 3 ஓவரில், 44 ரன்கள் கொடுத்து ஏமாற்றினார்.
    ஒரு பவுண்டரிக்கு ரூ. 25 ஆயிரம்
    உலக கோப்பை தொடரின் பைனலில் அடிக்கப்பட்ட ஒவ்வொரு பவுண்டரி, சிக்சருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இது உலகளவில் <உள்ள, பின் தங்கிய குழந்தைகளின் படிப்புக்கு தேவையான, புத்தகங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும்.
    ரூ. 1 கோடி பரிசு
    உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்களுக்கு, பரிசு மழை குவிகிறது. பி.சி.சி.ஐ., சார்பில் ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படுகிறது. தவிர, பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் உட்பட மற்ற அனைத்து சக உதவியாளர்களுக்கும் தலா ரூ. 50 லட்சம், அணியின் தேர்வுக்குழுவினருக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசுத்தொகை தரப்படுகிறது.
    கார் பரிசு: உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு, ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான "வெர்னா' என்ற காரை, பரிசாக தர முன்வந்துள்ளது. இதன் படி, சுமார் 7 முதல் 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒவ்வொரு வீரருக்கும் கிடைக்கிறது.
    பெருமைப்படத்தக்க தருணம்: சச்சின்
    கடந்த ஐந்து உலக கோப்பை தொடர்களில் பங்கேற்ற சச்சின், இடம் பெற்றிருந்த இந்திய அணி இதுவரை கோப்பை வென்றதில்லை. ஆறாவது முறையாக இத்தொடரில் பங்கேற்ற சச்சின், முதன் முறையாக உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற பெருமை பெற்றார். இதுகுறித்து சச்சின் கூறுகையில்,"" இது எனது வாழ்நாளின் மிகச் சிறந்த பெருமைப்படத்தக்க தருணம். வரலாற்று சிறப்புமிக்க திறமையை, வெளிப்படுத்தி, அசத்திய இந்திய வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,'' என்றார். 

    அனைத்துமே சச்சினுக்காக...
    உலக கோப்பை வென்றது குறித்து இந்திய அணி வீரர் காம்பிர் கூறுகையில்,"" கோப்பை வென்றதற்கான அனைத்து பாராட்டுகளும் சச்சினுக்குத்தான். ஏனெனில், நாங்கள் அனைவரும் அவருக்காகத்தான் விளையாடினோம். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தற்போது இலங்கையை வீழ்த்தியது எல்லாம் சச்சினுக்காகத்தான்,'' என்றார்.
    பைனலில் சாதித்தேன்: தோனி
    இலங்கைக்கு எதிரான பைனலில் ஆட்ட நாயகன் வென்ற கேப்டன் தோனி கூறுகையில்,"" பைனலில் கோப்பை வெல்லவில்லை என்றால், பல கேள்விளுக்கு பதில் சொல்ல வேண்டியது இருந்திருக்கும். ஏன் அஷ்வினை சேர்க்கவில்லை, ஏன் ஸ்ரீசாந்தை அணியில்சேர்த்தீர்கள், ஏன் யுவராஜ் சிங்கை முதலில் பேட் செய்ய அனுப்பவில்லை என, பல கேள்விகள் எழுந்திருக்கும். இவை எல்லாம் சேர்ந்து தான் என்னை சிறப்பாக விளையாடத் தூண்டியது. கடந்த போட்டியில் சரியாக விளையாடாததால், நெருக்கடி ஏற்பட்டது. இதனால், பைனலில் முன்னதாக களமிறங்க வேண்டும் என, பயிற்சியாளரும், சீனியர் வீரர்கள் பலரும் விரும்பினர். கடைசியில் என்னை நிரூபித்தேன். முன்னதாக, பனிப்பொழிவும் சற்று கைகொடுக்க, காம்பிரும், விராத் கோஹ்லியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் எதிரணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து, வெற்றி பெற முடிந்தது,'' என்றார்.
    சொந்த மண்ணில் சாதனை
    சொந்த மண்ணில் உலக கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்திய நாடுகள் கோப்பை வென்றதில்லை என்ற கருத்தை முதல் முறையாக தகர்த்தது. இதற்கு முன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள் உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால், அந்த அணிகளால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. 
    மனைவி வந்த நேரம்
    நேற்று அரங்கில் இருந்தவாறு தனது கணவரை பார்த்து நீண்ட நேரம் களத்தில் இருந்து பேட் செய்யும்படி சைகை செய்தார் ஜெயவர்தனாவின் மனைவி. இதன்படி அசத்தலாக ஆடிய அவர் சதம் கடந்தார். 
    பூணம் பாண்டே "ரெடி'
    இந்திய அணி கோப்பை வென்றால் பிறந்தமேனியாக வலம் வர தயார் என மும்பை மாடல் அழகி பூணம் பாண்டே சவால் விடுத்திருந்தார். இது குறித்து 20 வயதான இவர் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு எழுதிய கடிதத்தில்,""பி.சி.சி.ஐ., அனுமதி அளிக்கும்பட்சத்தில் திட்டமிட்டபடி நிர்வாணமாக வலம் வருவேன். எனக்கு எதிராக விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து கவலை இல்லை,''என்றார். தற்போது இந்திய அணி உலக கோப்பை வென்றுள்ள நிலையில், பூணத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    "
    பேட்' உடைந்தது
    நேற்று 38வது ஓவரில், மலிங்கா அசுர வேகத்தில் வீசிய பந்தை காம்பிர் அடித்த போது, அவரது பேட்டின் நுனிப்பகுதி உடைந்தது. பின் புதிய பேட் பயன்படுத்தி ரன் வேட்டையை தொடர்ந்தார்.
    நாடு முழுவதும் கொண்டாட்டம்
    இந்திய அணி, உலக கோப்பை வென்றதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இரவெல்லாம் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பை வென்று சாதித்த இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.



    Posted by விழியே பேசு... at 10:59 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: விளையாட்டு செய்திகள்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ▼  April (772)
      • படமாகிறது சாய்பாபா வரலாறு
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : பிகினி அணிய தைரியம்...
      • கமலின் முத்தத்திற்கு ரூ.1.25கோடி கேட்ட தமன்னா!
      • விஜய்க்கு ஆப்பு ஆரம்பம் ; 'பொன்னியின் செல்வன் கைவி...
      • அருணாச்சல பிரதேச முதல்வர் நிலை என்ன? மாறுபட்ட கருத...
      • காஸ்டியூம் டிசைனராக மாறினார் அமலா பால்!
      • மீண்டும் மாற்றப்படுகிறது விக்ரம் பட தலைப்பு!
      • நண்பன் க்ளைமாக்ஸ்
      • பொன்னர் - சங்கருக்கும் காவலன் நிலைமைதானாம்!
      • சோனா நமீதாக்களுக்கு சூப்! - வந்தார் ஒரு கேரள அழகி
      • காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசலா? : ஜெயந்தி ...
      • ரஜினி, அஜீத், பாலசந்தர், கட்டபுள்ள... கோலிவுட்டை ச...
      • கருணாநிதி குடும்பத்தினர் அனைவர் பெயரையும் குற்றப்ப...
      • ராஜபக்சேவை தூக்கிலிடக் கோரி ஆர்ப்பாட்டம்
      • வடிவேலுக்கெல்லாம் பதில் சொல்வதா? கே.எஸ்.ரவிகுமார் ...
      • சைக்கோ வில்லன் ஆனார் விவேக்
      • கமல் - ஸ்ரீதேவி மீண்டும் ஜோடி..?
      • உடல் நலக்குறைவு; “ராணா” படப்பிடிப்பு ரத்து ; மீண்ட...
      • நடிகர் விக்ரம் வீடு முன்பு ஆர்ப்பாட்டம்: 100 பேர் ...
      • நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோல...
      • என் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் ஈடுபட்டால் ...
      • இலங்கை போர்க்குற்ற அறிக்கை குறித்து விவாதிக்க நாடா...
      • சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!
      • கோப்புகள் அழிப்பு: அ.தி.மு.க., புகார் பின்னணி
      • நடிகை சொர்ணாவுக்கு சிறை தண்டனை உறுதி: ஐகோர்ட்
      • தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மு.க.ஸ்டாலினுக்கு முதல்...
      • 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் ப...
      • கால்ஷீட்டுக்கு பணம் தேனிலவு செலவும் ஃப்ரீ! -வித்த...
      • சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீச்சு
      • “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; சூட்டிங் ஸ்பாட் புகை...
      • சிரஞ்சீவி கேட்ட உதவி கே.பாக்யராஜ் பெருமிதம்!
      • வேட்டையில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மாதவன்
      • ராஜபக்சேவை தண்டிக்க இந்தியா முட்டுக் கட்டையாக நிற்...
      • ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் : கலைஞர் பேட்டி - பட...
      • லிம்கா சாதனை படைத்த கன்னட சினிமா
      • வெளிநாடா, உள்ளூரா... வடிவேலு விஷயத்தில் டமால்!
      • திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!- ஹெட்லைன்ஸ் டுடே க...
      • மருத்துவமனையில் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார...
      • ரவிக்குமார் பேச்சு, நேற்றோடு போச்சு! -ராணா டைட்டி...
      • சாய்பாபா வாரிசையும் நியமிக்கவில்லை, உயிலையும் எழுத...
      • ஐ.நா. நிபுணர்கள் குழு, முட்டாள்கள்: இலங்கை அமைச்சர்
      • மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத்...
      • ரஜினி நலம்: 'சாதாரண செக்கப்தான், அதற்குள் வதந்தியா?'
      • தீவிர சிகிச்சைப்பிரிவில் ரஜினிகாந்த் அனுமதி : பலத...
      • ரசிகர்கள் எதிர்பார்ப்பு; விஜய் பிறந்த நாளில் வேலாய...
      • வந்துவிட்டார் வில்லியம், காக்க வைப்பாரா கேட்? : நே...
      • குடும்பத்துடன் விஜயகாந்த் வெளிநாட்டுக்கு எஸ்கேப்
      • விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ரஜினி படத்தில...
      • தரம் கெட்டு போன சிம்பு: பாவனா தாக்கு!
      • 'எக்ஸ்ட்ரா பைசா ஆகும், பரவால்லயா!!' - அனுஷ்கா
      • துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!
      • வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க ராசா மறுப்பு
      • பிஏசி கூட்டத்தில் அரங்கேறிய கூத்துகள்... ஒரு வாக்க...
      • ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனித சங்கிலி ...
      • தவறான சிகிச்சையால் கண்பார்வை இழந்த மாணவிக்கு சிகிச...
      • சாய்பாபா என்னை ஜெயிலில் சந்தித்தார்: அத்வானி
      • விஜய் பட விழா : ஜெ. பங்கேற்பதில் சிக்கல்
      • ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!
      • காதலில் தோல்வி : கிரண்!
      • சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத்...
      • மே 14ல் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்: ஜெ., வரு...
      • ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி கி.வ...
      • நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்... 'திரும்ப வந்தா...
      • ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்... அதிகாரப்பூர்வ அறிவி...
      • 50 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரனை சுட்டு பிட...
      • தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி
      • மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த ரஜினியின...
      • சாய்பாபா மரணம் குறித்த சர்ச்சை : ஆந்திர அரசு விளக்கம்
      • 'நான் அழகிரி மகன்டா ... கருணாநிதி பேரன்ல்ல...ரூ. 1...
      • ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இல...
      • இலங்கை அரசின் போர்க் குற்றம்: ஐ.நா.சபை அறிக்கை குற...
      • ஐ.நா. அறிக்கை: வெளிநாட்டு தூதுவரகளை மீண்டும் சந்தி...
      • ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானாரா?: கருணா...
      • 2ஜி.. ராசா மீது குற்றச்சாட்டு, தாக்கப்படும் PMO, ப...
      • ஏப் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர்! சாய்பாபா மர...
      • ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்
      • போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மன்றத்தினர் :அபராதம்
      • காங்கிரசை ஜெ., தாக்கி பேசாததற்கு காரணம் என்ன?
      • ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ...
      • மங்காத்தாவில் அஜீத்துக்கு நெகடிவ் ரோல்!
      • உதயநிதி ஸ்டாலினின் ஃபார்முலா
      • எனக்கு கல்யாணமா? - பதறும் 'கவர்ச்சி' கிரண்
      • நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? - 'கோ' பியா
      • அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்டு அசிங்கப்பட...
      • வீரப்பன் சினிமா: தயாரிப்பு-முத்துலட்சுமி; டைரக்ஷன்...
      • கற்பழிப்பு வழக்கில் பிரபலஇந்தி நடிகருக்கு ஜாமீன்!
      • விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா
      • ஐ.நா அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் க...
      • தமிழக எல்லையில் நடிகர் கலாபவன் மணி ஆய்வு
      • பாபா மே 14ல் மீண்டும் வருவார்? ;புட்டபர்த்தியில் ப...
      • கைவிரித்தார் பான் கீ மூன்
      • நடிகர் கார்த்திக்கு திருமணம் முடிவானது
      • நாட்டை பற்றி கவலை... வீட்டை பிடுங்கும் நிலைமை? -ஒர...
      • ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது - எட்டப்பன் ...
      • வடிவேலு வேண்டாம் ; வடிவேலுக்கு ரஜினி வைத்த ஆப்பு
      • சிங்கள ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்-புதிய ஆத...
      • இதுவரை வெளிவராத அதி பயங்கர போர்க்குற்ற காட்சிகளை ஒ...
      • 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா? கல...
      • சத்ய சாய்பாபா பக்தர்களை கடுப்பேற்றிய நித்யானந்தா!
      • இலங்கையின் போர்க் குற்றம்-மத்திய அரசுக்கு திமுக 'த...
      • 14 வில்லன்களுடன் மோதும் விஜய்.!
      • தயாளு பெயர் சேர்க்கப்படாதது ஏன்? சாட்சிகளின் வரிசை...
      • எவ்வளவு அடித்தாலும் வலிக்காத தி.மு.க.,: ஆர்.ரங்கரா...
      • என் மீது ஏதேனும் குற்றம் கூற விரும்பினால்...... ...
      • ஐ.நா.அறிக்கை எதிரொலி: ராஜபக்சே தம்பி அமெரிக்கா பயண...
      • தங்கபாலுவை கட்சியில் இருந்து நீக்க கோரி காங்கிரசா...
      • போர்க்குற்றம் குறித்து சர்வதேச குழு விசாரிக்க ஒப்ப...
      • தபால் அலுவலகங்களில் தங்கத்திற்கு தங்கம் இலவசம்
      • கனிமொழியை கைது செய்ய வேண்டும்; கலைஞர் டிவியை முடக்...
      • குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி பெயர்: நாளை திமுக உ...
      • ஒப்பற்ற மகான் சாய்பாபா மீண்டும் அவதரிப்பார்! - சிர...
      • வானம் படத்திற்கு யு/ஏ சான்று
      • உள்ளாடையை வெளியில் அணிய விருப்பமில்லை - சல்மான் கி...
      • இலங்கை அரசை காப்பாற்றினால் உலக அரங்கில் இந்தியாவுக...
      • சங்கீதாவின் ஒரு நாளுக்காக காத்திருக்கும் டைரக்டர்!
      • இந்தியர்கள்தான் அதிக அளவில் கருப்பு பணத்தை வைத்துள...
      • ஜெயலலிதா புத்தகத்திற்கு தடை
      • தனுஷுக்கு ரஜினி சிபாரிசு சந்தேகம் கிளப்பும் கோலிவுட்
      • 2ஜி: கருணாநிதி அரசை 'டிஸ்மிஸ்' செய்க!-விஜயகாந்த்
      • கொலை மிரட்டல்-சாய்பாபா உதவியாளருக்கு பாதுகாப்பு
      • ராஜபக்சேவை மன்மோகன் சிங் காப்பாற்றுவாரா?
      • இலங்கையுடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும...
      • நெஞ்சை உறையவைக்கும் ஐ.நாவின் அறிக்கை முழு விவரம்
      • ஈழத் தமிழர்களுக்காக இணையுங்கள் - அரசியல் கட்சிகளுக...
      • தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!
      • இறுதிப்போர் குறித்து இலங்கை அரசு பொய் சொன்னது : ஐ...
      • நார்வே திரைப்பட விழா: விருதுகள் அறிவிப்பு : எந்திர...
      • சபரிமலையில் மகரவிளக்கு தோன்றும் ரகசியத்தை வெளியிட்...
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.