இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதனால் ஆவேசமடைந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், எங்கள் நிர்வாகிகளை நிக்குவதற்கு தங்கபாலுவுக்கு உரிமையில்லை. அவர் தனது உத்தரவை வாபஸ் வாங்கவேண்டும் என்று அறிவித்தார்.
ஆனால் தங்கபாலு உத்தரவை வாபஸ் வாங்காததால், அவர் பதவியில் இருந்து நீங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இன்று சென்னையில் இளைஞர் காங்கிரஸ் தி. நகர்க் தொகுதி தலைவர் ஹரி தலைமையில் தி.நகர். பேருந்து நிலையம் முன்பு தங்கபாலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, அவரது உருவபொம்மையை எரிக்க முற்பட்டனர்.
ஆனால் அதற்குள் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்தனர்.

No comments:
Post a Comment