நடிகை சாரா ஜேனுடன் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி நெருங்கிப் பழக ஆரம்பித்திருப்பது விளையாட்டு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோஹ்லியும் இந்த பட்டியலில் சேர்ந்திருப்பது லேட்டஸ்ட் தகவல்.
அதிரடி ஆட்டத்தில் அசத்தி வரும் விராட் கோஹ்லியும், கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடந்த பார்ட்டியில் , ‘தீராத விளையாட்டு பிள்ளை’ பட ஹீரோயின் சாரா ஜேனும் சந்தித்தனர். அன்று முதல் இருவரும் நெருங்கி பழகி வருகின்றனர். பல இடங்களுக்கு ஜோடியாக ரகசிய விசிட் அடிக்கின்றனர்.
டி20 மூலமாகவும் நட்பு வளர்க்க விரும்பினார் கோஹ்லி. ‘டி20 கிரிக்கெட் போட்டியில் என் ஆட்டத்தை பார்க்கலாம் வா’ என்று சாராவை அழைத்திருந்தார்.
‘கேம்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ள சாரா, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால் வரவில்லை என்று தகவல் அனுப்பியிருக்கிறார்.
இந்நிலையில் விரைவில் பெங்களூரில் நடக்கவுள்ள கிரிக்கெட் போட்டிக்கு நேரில் வந்து தன்னை உற்சாகப்படுத்துமாறு சாராவுக்கு ரகசிய அழைப்பு விடுத்திருக்கிறார் கோஹ்லி.
சாராவும் ஓகே சொல்லிவிட்டாராம். நட்பு விரைவில் காதலாக மாறும் என்கின்றனர் நடிகை வட்டாரங்கள்.


No comments:
Post a Comment