கார்த்தி நாயகனாக நடிக்கும் ‘சகுனி’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை வருகிற 31-ந் தேதி பிரமாண்ட விழா நடத்தி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
‘சகுனி’ முழுநீள அரசியல் படமாக தயாராகியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு எதிரான படம் என்றும் கூறப்படுகிறது. அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் கடுமையாக விமர்சித்து காட்சிகளும் வசனங்களும் வைத்திருப்பதாக தகவல் பரவியுள்ளது.
இதுகுறித்து ‘சகுனி’ படத்தின் இயக்குனர் சங்கர் தயாளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தற்போதைய அரசியலை அலசும் படமாக இதை எடுத்துள்ளோம். அதை காமெடியுடன் சொல்லியுள்ளோம். எந்தவொரு அரசியல் கட்சியையோ அரசியல்வாதியையோ ‘குறி’வைத்து படத்தை எடுக்கவில்லை. வருகிற 31-ந் தேதி இசை வெளியீடு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment