காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 5 ஆண்டு பதவிக்காலம் 2014-ம் ஆண்டு மே மாதம் முடிய உள்ளது. எனவே 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் பாராளு மன்றத்துக்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கு இன்னும் சுமார் 20 மாதங்களே காலஅவகாசம் உள்ளது.
2014-ம் ஆண்டு பாராளு மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் சோனியா தீவிரமாக உள்ளார். பாரதீய ஜனதா கட்சியும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இப்போதே வியூகம் வகுக்க தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக உத்தர பிரதேச மாநிலத்தில் போட்டியிட உள்ள 80 தொகுதி வேட்பாளர்களை வரும் டிசம்பர் மாதம் அறிவிக்க பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மாநிலங்களில் செல்வாக்குடன் திகழும் கட்சிகளிடம் கூட்டணி ஏற்படுத்தும் பணிகளையும் பா.ஜ.க. தலைவர்கள் தொடங்கி விட்டனர். தற்போது நாடெங்கிலும் நிலவும் சமூக - பொருளாதார சூழ்நிலைகள் பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக உள்ளன. எனவே அதை பயன்படுத்திக் கொள்ள பா.ஜ.க. ஓசையின்றி திட்டமிட்டு வருகிறது. மக்களை மலைக்க வைத்த ஊழல் குற்றச்சாட்டுக்கள், அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு மற்றும் மாநில மக்களின் உணர்வுகளுக்கு எதிரான போக்கு உள்பட பல்வேறு விஷயங்களால் நாடெங்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவுகிறது. இது 2014 பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சில குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சோனியா முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்ய ஆலோசித்து வருகிறார். மத்திய அரசில் விரைவில் ராகுல் காந்தி முக்கியப் பொறுப்புக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய சோனியா திட்டமிட்டுள்ளார். அதன்படி நாடெங்கும் இளைஞர்களை அதிக அளவில் கட்சிப் பணிகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தோழமைக் கட்சிகளின் குடைச்சலால் பல தடவை எரிச்சலுக்குள்ளான சோனியா 2014-ல் தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர வேண்டும் என்று நினைக்கிறார். அதை நிறைவேற்ற வேண்டுமானால் சில பெரிய மாநிலங்களில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க செய்ய வேண்டும். இதற்காக மாநில காங்கிரஸ் அமைப்புகளில் அதிரடி மாற்றங்கள் செய்ய சோனியா ஆலோசித்து வருகிறார்.
முதல் கட்டமாக ஆந்திரா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய 3 மாநிலங்களை அவர் ஆய்வு செய்து வருகிறார். இந்த 3 மாநிலங்களிலும் முதல்-மந்திரிகளின் செயல் பாடுகள் காங்கிரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தரும் வகையில் இல்லை என்று அவர் உணர்ந்துள்ளார். எனவே ஆந்திர முதல்- மந்திரி கிரண்குமார் ரெட்டி, மராட்டிய முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகிய மூவருக்கும் கல்தா கொடுக்க சோனியா முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
3 மாநிலங்களிலும் புதிய முதல்வர்களை நியமித்து காங்கிரசில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் காங்கிரஸ் வாக்குகளை ஜெகன்மோகன்ரெட்டி கணிசமான அளவுக்கு தன் பக்கம் கொண்டு சென்று விட்டார். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் ஆந்திர மக்கள் காங்கிரசை விட ஜெகன் மோகனையே அதிகம் விரும்புவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
எனவே மக்களிடம் செல்வாக்கு பெற்றுத் திகழும் ஜெகன்மோகனை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர வைக்க சோனியா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகளை ஜெகன்மோகன் கட்சியினருடன் காங்கிரஸ் தலைவர்கள் நடத்தி வருகிறார்கள். அதில் உடன்பாடு ஏற்படுமா? என்று தெரியவில்லை.
இதற்கிடையே காங்கிரசில் மீண்டும் சேரும் திட்டம் இல்லை என்று ஜெகன்மோகன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு செல்வாக்கு பெருகுவதைத் தடுக்கவே இந்த வதந்தியை காங்கிரசார் கிளப்பி விட்டுள்ளனர் என்று ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
என்றாலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை, மீண்டும் காங்கிரசுடன் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதுபற்றி கருத்து தெரிவிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மறுத்து விட்டனர். அதுபோல ராஜஸ்தான், மராட்டிய மாநிலங்களில் செய்ய போகும் அதிரடி மாற்றங்கள் விபரத்தையும் தெரிவிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மறுத்து விட்டனர். விரைவில் சோனியா அதிரடி மாற்றங்களை நிகழ்த்த உள்ளார் என்பதை மட்டும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment