கேரள அழகி சகானாவை பிடிப்பதற்காக அடையாறு மற்றும் புளியந்தோப்பு மகளிர் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள். அடையாரைச் சேர்ந்த சரவணன் என்ற வாலிபர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சகானாவிடம் ஏமாந்தார். போலீசாரிடம் சகானா பயன்படுத்திய செல்போன் எண்ணை கொடுத்து இருந்தார். அந்த எண்ணில் போலீசார் தொடர்பு கொண்ட போது அந்த எண்கள் உபயோகத்தில் இல்லை என தெரிய வந்தது.
கடைசியாக புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா என்ற வாலிபர் தான் சகானாவுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவரும் சகானா பயன்படுத்திய 2 செல்போன் எண்களை கொடுத்துள்ளார். இந்த எண்களை வைத்து சகானா இருப்பிடத்தை கண்டு பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.
ஆனால் அந்த எண்களை அடிக்கடி “சுவிட் ஆப்” செய்து வைத்து விடுகிறார். இதனால் போலீசாரால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையே இன்று மதியம் 12.30 மணி அளவில் திடீர் என்று சகானாவின் செல்போன் இணைப்பு கிடைத்தது. அதில் தொடர்பு கொண்டு பேசிய போது சகானா எதிர் முனையில் பேசினார்.
நீங்கள் சகானா தானா என்று கேட்ட போது ஆம் என்று உறுதி செய்தார். உங்கள் மீது கல்யாண மோசடி புகார்கள் வந்திருக்கிறதே என்று கேட்டதற்கு ஒரு பெண்ணால் 50 பேரை திருமணம் செய்து ஏமாற்ற முடியுமா? இது சாத்தியமா? என்று ஆவேசப்பட்டார்.
மேலும் நான் ரோமிங்கில் (வெளியூரில்) இருக்கிறேன். எனது செல்போன் எப்போது வேண்டு மானாலும் துண்டிக்கப்படலாம். போதிய இருப்பு இல்லாததால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறினார். அவர் சொன்னது போலவே அடுத்த நொடியே செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மறு படியும் தொடர்பு கொண்ட போது “சுவிட் ஆப்” செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதேபோல் நேற்று சகானாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது என்னை அசிங்கப்படுத்துகிறார்கள், நான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment