பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் தபால் துறை சேமிப்பு கணக்கு பற்றி கேட்ட கேள்விக்கு தொலைத்தொடர்பு மந்திரி கபில்சிபல் பதில் அளித்தார். அவர் கூறியாதாவது:-
நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் பல கோடி பேர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். அவர்களில் 2.49 கோடி பேர் தங்கள் கணக்குகளை பராமரிக்காமல் உள்ளனர். அவர்களது கணக்கில் உள்ள ரூ. 752 கோடியே 44 லட்சத்து 57 ஆயிரத்து 414 பணம் கேட்பாரற்று இருக்கிறது.
இதில் மேற்கு வங்காளத்தில் மட்டும் 20.16 லட்சம் தபால் நிலை சேமிப்பு கணக்குகள் பராமரிப்பின்றி இருக்கிறது. இந்த கணக்குகளில் ரூ. 107 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழகம் அங்கு 62.72 லட்சம் சேமிப்பு கணக்குகள் பராமரிக்கப்படாமல் உள்ளது.
அந்த சேமிப்பு கணக்குகளில் உள்ள ரூ. 105.87 கோடி பணம் கேட்பாரற்று இருக்கிறது. தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவுக்கு பணம் டெபாசிட் செய்து சேமிப்பு கணக்கை தொடர்து பராமரித்து வரவேண்டும்.
இதுபற்றி பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கணக்கை பராமரிக்காமல் இருப்போருக்கு நோட்டீஸ் அனுப்பி கணக்கில் சிறிதளவு பணமாவது டெபாசிட் செய்யும்படி கோரிக்கை விடுத்து வருகிறோம். நாட்டின் பல பகுதிகளில் இருந்து தபால் பட்டுவாடா செய்வதில் ஏற்படும் குறைகள் பற்றி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அவற்றில் 41 அயிரத்து 794 பேர் பதிவு செய்யப்பட்ட தபால்கள் உரிய முகவரிக்கு சென்றடையவில்லை என்று புகார் கூறியுள்ளனர். இதுபற்றி உரிய விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment