நிலக்கரி ஒதுக்கீடு உரிமம் கொடுக்கப்பட்டதில் மத்திய அரசுக்கு ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை தெரிவித்தது.
இந்த இழப்புக்கு பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றத்தில் தினமும் அமளியில் ஈடுபட்டுள்ளது. இதனால் கடந்த 2 தினங்களாக பாராளுமன்றம் முடங்கியது.
மன்மோகன்சிங் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என்று கூறி வரும் பாரதீய ஜனதா தலைவர்கள் அடுத்தக்கட்ட அதிரடி நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார்கள்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்கும் பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் இருந்து நேற்று பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது. அந்த குழுவில் உள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள பா.ஜ.க. தலைவர்கள் அந்த குழுவில் இருந்து ராஜினாமா செய்ய ஆலோசித்து வருவதாக கூறினார்கள்.
இதற்கிடையே பாராளுமன்ற நிலைக்குழுக்கள் அனைத்தில் இருந்தும் விலகலாமா என்றும் பா.ஜ.க. ஆலோசித்து வருகிறது. பாராளுமன்றத்தின் ஒவ்வொரு இலாகாவிலும் உள்ள நிலைக்குழுக்களில் பாரதீய ஜனதா கட்சி இடம் பெற்றுள்ளது.
சில நிலைக்குழுக்களில் பா.ஜ.க. முக்கிய அங்கம் வகிக்கிறது. மொத்தம் 114 நிலைக்குழு இடங்கள் பா.ஜ.க.வசம் உள்ளது. இந்த பதவிகளில் இருந்து பா.ஜ.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் மத்திய அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்படும்.
பாரதீய ஜனதாவின் இந்த அதிரடி திட்டம் காங்கிரஸ் தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிலைக்குழுக்களில் காலியாகும் 114 இடங்களை நிரப்ப வேண்டுமானால் மீண்டும் அதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் போட்டி ஏற்படும். இது மேலும் தங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக்கூடும் என்று காங்கிரசார் கருதுகிறார்கள். பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இன்னும் 20 மாதங்கள் உள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க. நிலைக்குழுக்களில் இருந்து விலகினால், நிலைக்குழுக்கள் செயல்பாடுகள் முடங்கும் அபாயமும் உள்ளது.
இது பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் சூழ்நிலையை ஏற்படுத்தும் என்கிறார்கள். இதனால் நிலைக்குழுக்களில் இருந்து விலகும் முடிவை பா.ஜ.க. எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment