தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் பாக்கெட் அளவிலான அரசு டைரி, ஆங்கிலத்தில் வெளியாகி உள்ள நிலையில், தமிழில் டைரி வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பாக்கெட் அளவு டெலிபோன் டைரி (ஆங்கிலம் மற்றும் தமிழ்) வெளியிடுவது வழக்கம். இந்த டைரியில் தமிழக ஆளுனர், தமிழக முதல்வர், தமிழக அமைச்சர்கள், துறை அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் போன்ற அலுவலகங்களின் பெயர்களும், நேரடி தொலைப்பேசி எண்களும் இடம் பெற்றிருக்கும்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான புதிய அதிமுக ஆட்சி ஏற்பட்டது. புதிய அமைச்சர்கள், துறை சார்ந்த புதிய அதிகாரிகள் நியமனம் நடைபெற்றது.
இது குறித்த தகவல்களுடன் புதிய தமிழக அரசு டைரி கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் (2012) ஆங்கிலத்தில் வெளிவந்தது. ஆனால் தமிழில் இந்த டைரி வெளியாகவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, விரைவில் வெளியிடப்படும் என்றனர்.
தமிழில் டைரி வெளியிடும் போது இலக்கப்பிழை திருத்தி வெளியிட வேண்டியுள்ளது. இதனால் கடந்த 8 மாதங்களாகியும் தமிழில் டைரி வெளி வரவில்லை. கடந்த திமுக ஆட்சியில் ஆங்கிலத்தில் மட்டும் இந்த டைரி வெளியானது.

No comments:
Post a Comment