வரும் 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியும், பாரதீய ஜனதா கட்சி சார்பாக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியும் நிறுத்தப்படுவார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது.
வரும் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர வேட்பாளராக நிறுத்துவது காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் மந்திரிகள் வரவேற்று பேசிவருகின்றனர்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி பிரதமர் வேட்பாளர் குறித்து கூறியதாவது:-
அறுபதை தாண்டுகிறவர்கள் தங்களை விட மூத்தவர்களோடு ஒப்பிட்டு தங்களை இளமையானவர்கள் என்று கருதுகிறார்கள். வாழ்க்கையில் சிலநேரங்களில் இதுபோன்று தவறாக கருதுவது சரியானதாகவேபடுகிறது. நரேந்திர மோடியும் தன்னை அப்படி நினைத்துகொண்டு இருக்கிறார். ஆனால் அரசியலில் அப்படி இருக்கவில்லை.
இன்று புதிய தலைமுறையினர் அனைத்து துறைகளிலும் தடம் பதிக்கின்றனர். காங்கிரஸிலும் அதே புதிய தலைமுறை தலைமையாக மாறிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸில் புதிய தலைமுறை தலைவர் தோன்றிக்கொண்டிருப்பது பாரதீய ஜனதா கட்சியினரை என்ன நடக்குமோ என்று கவலையடைய வைத்திருகிறது.
காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியை முன்னிறுத்தி வைக்கப்படுகின்ற விஷயம் அது கட்சியோ அல்லது அரசோ ஒரு திட்டத்தின் அடிப்படையிலே வைக்கப்படுகிறது. இதனிடையே யாரும் இடையூறு செய்யக்கூடாது. கட்சியினரிடையே மிகுந்த செல்வாக்கை பெற்றுள்ள ராகுல் காந்தி அதற்காக எந்த பொறுப்புகளையும் அவர் உதறித்தள்ள தேவையில்லை.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில் அதை சமாளிக்க ராகுல் காந்தியே முன்னிறுத்தபடுவார். அடுத்த தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் பணிகள் நடக்குமா என்று எனக்கு தெரியாது.
இவ்வாறு ஜனார்த்தன் திவேதி கூறினார்.
சில நாட்களுக்கு முன்னர் மத்திய மந்திரி பேனி பிரசாத் வர்மா வரும் 2014 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பாரதீய ஜனதாவின் நரேந்திர மோடியை சந்திப்பார். ஆதாவது 42 , 61 ஐ எதிர்க்கிறது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment