அன்னா ஹசாரே ஒரு செல்லாக்காசு என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஈரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரும் 11ம் தேதி குன்னத்தூரில் காமராஜர் சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவிற்கு நான் தலைமை தாங்குகிறேன். மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் காமராஜர் சிலையை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இருந்து 25,000 பேர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும். ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரோவுக்கு மக்கள் அளித்த ஆதரவு குறைந்துவி்ட்டது. நாடாளுமன்றத்தில் தான் சட்டங்கள் கொண்டு வர முடியுமே தவிர இவர் போன்ற செல்லாக்காசுகளால் எதுவும் செய்ய முடியாது.
டெசோ மாநாடு நடத்துவது கருணாநிதியின் விருப்பம். அந்த மாநாட்டால் என்ன நடக்கும் என்பதை சொல்ல நான் ஒன்றும் ஜோதிடர் கிடையாது. அட்டப்படாடியில் அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அங்கு அணை கட்டினால் தமிழக காங்கிரஸ் அதை எதிர்த்து போராடும். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தியுடன் சேர்ந்து ராகுல் காந்தியின் தலைமையும் தேவை. அவர்களின் தலைமையை வரவேற்கிறோம். காங்கிரஸ்-திமுக கூட்டணி நீடிக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது என்றார்.
No comments:
Post a Comment