பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி முன் மாதிரியாக விளங்குகிறார். மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாலும், கடும் நடவடிக்கை எடுத்து தீவிரவாதத்தை கட்டுப்படுத்தியதாலும் நிர்வாகத் திறமைமிக்கவராக கட்சியினரால் முன் நிறுத்தப்பட்டுள்ளார்.
எனவே நரேந்திர மோடியின் செல்வாக்கை வைத்து அவரை 2014 பாராளுமன்ற தேர்தலில் பிரதமராக நிறுத்தினால் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்பது பாரதீய ஜனதாவில் உள்ள சில தலைவர்களது கணிப்பாகும்.
ஆனால் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ்குமார் பகிரங்கமாக நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின்போதும் அவர் இந்த பிரச்சினையை எழுப்பி மீண்டும் உறுதிபட தெரிவித்தார். பிரதமர் வேட்பாளராக மத சார்பற்ற தலைவர் ஒருவரையே நிறுத்த வேண்டும்.
இதுதொடர்பாக பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி தனக்கு உறுதி அளிக்க வேண்டும் என்றும் நிதிஷ்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
நிதிஷ்குமாரின் கடும் எதிர்ப்பு காரணமாக பாரதீய ஜனதா நரேந்திரமோடியை நிறுத்தும் முடிவில் இருந்து பின்வாங்கியது. இதுதொடர்பாக நிதிஷ்குமாருக்கு நிதின் கட்காரி உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 25-ந் தேதி டெல்லியில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளரை கட்சி இன்றும் முடிவு செய்யவில்லை. 2014 பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடியை முன் நிறுத்தமாட்டோம் என்று நிதின் கட்காரி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி நிதின் கட்காரியை நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இந்த தகவலை உறுதி செய்தார். நிதின் கட்காரி கூறியதாவது:-
ஒரு வாரத்துக்கு முன்பு டெல்லியில் கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடந்தது. அப்போது பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. உரிய நேரத்தில் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பீகாரில் லல்லு பிரசாத் முதல்-மந்திரியாக இருந்தபோது அவருக்கு முஸ்லிம்கள் ஆதரவு இருந்தது. அதன் பிறகு நிதிஷ்குமார் ஆட்சியை கைப்பற்றினார். முஸ்லிம்கள் ஆதரவை பெறுவதற்காக நரேந்திரமோடியை நிதிஷ்குமார் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை.
மேலும் பீகார் மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாக நரேந்திரமோடி தெரிவித்த கருத்தும் அவரை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதனால் இருவருக்கும் 2005-ம் ஆண்டு முதல் பனிப்போர் நிலவி வந்தது. அது ஜனாதிபதி தேர்தலின் போது வெளிப்படையாக வெடித்தது. முக்கிய கூட்டணி கட்சியின் எதிர்ப்பு காரணமாக பாரதீய ஜனதாவும் அதை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

No comments:
Post a Comment