ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை நியாயப் படுத்தி பேசியதால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி.யிடம் மனு அளித்துள்ளனர். கடந்த 18-ந்தேதி வில்லியனூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கட்சியின் தலைவரும் இயக்குனருமான சீமான் இதில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் ராஜீவ்காந்தியின் கொலையை நியாயப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரசார் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதுவை காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமையில் காங்கிரஸ் பிரமுகர்கள் ஐ.ஜி. ரன்வீர்சிங் கிறிஸ்னியாவை நேற்று மாலை சந்தித்து மனு அளித்துள்ளனர். மனு அளித்துவிட்டு வந்த ஏ.வி. சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வில்லியனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த கூட்டத்தில் சீமான் ராஜீவ்காந்தியின் கொலையை நியாயப்படுத்தி பேசியுள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை காங்கிரஸ் துணைத்தலைவர்கள் பாலாஜி, கோவிந்தராஜ், எம்.எல்.ஏ.க்கள் நமச் சிவாயம், லட்சுமி நாராயணன், மல்லாடி கிருஷ்ணாராவ், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, ஏழுமலை, தொழிலதிபர் சிவக்கொழுந்து, பொதுச் செயலாளர் வெற்றிச் செல்வன் உள்பட மற்றும் பல காங்கிரஸ் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment