தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் பாளை மார்க்கெட் திடலில் இன்று மாலை நடக்கிறது. விழாவையொட்டி பாளை புனித செபஸ்தியார் ஆலயம் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. அதனை விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் இன்று மாலை பாளையில் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக பாளை செபஸ்தியார் ஆலயத்தை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். தமிழகத்தில் அ.தி.மு.க. அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. அரசு செய்ய வேண்டிய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம் என்றார்.
பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-
விஜயகாந்த் பிறந்த நாளை 32 மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுகிறோம். ஆளுங்கட்சி செய்ய தவறிய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். ஆளுங்கட்சியில் இருந்து பல்வேறு இடையூறுகள் வருகின்றன. அதையும் தாண்டி எங்கள் பணி நடக்கிறது.
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியை சுத்தப்படுத்தியுள்ளோம். எதிர்கட்சியாக இருந்து நாங்கள் செய்கிற பணிகளை அரசு நினைத்தால் மிகவும் சிறப்பாக செய்யலாம். ஆனால் அதை செய்யவில்லை. நெல்லையில் தே.மு.தி.க. பேனர்கள் வைப்பதற்கு ஆளுங்கட்சியினர் இடையூறு செய்கின்றனர். எவ்வளவு இடையூறு செய்தாலும் எங்களது பணி திட்டமிட்டப்படி நடைபெறும் என்றார்.
No comments:
Post a Comment