சகானா..! இந்த பெயரை கேட்டாலே “அடிப்பாவி...? நீயா இப்படி...?” என்று இளைஞர்கள் பலர் குமுறினாலும் அவள் அள்ளிக் கொடுத்த இன்பத்தால் இதயம் இனிப்பதாக கூறுகிறார்கள். கல்யாண மகாராணியாய் தமிழகத்திலும், கேரளாவிலும் கடந்த சில தினங்களாக பேசப்படும் சஹானா இளைஞர்களின் பார்வையில் அழகி மட்டுமல்ல. ஒரு பெண்ணால் பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்ய முடியுமா? இது சாத்தியமா? பெரிய கில்லாடியாக இருந்திருக்கிறாளே?
இப்படி பல கேள்விகளுடன் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக இடம் பிடித்த சகானாவை பற்றி பட்டி தொட்டியெல்லாம் பேசுகிறார்கள். ஐந்தடி உயரம், நேர்த்தியாக ஐ புரோ செய்யப்பட்ட புருவங்கள், கோதுமை நிறம், லிப்ஸ்டிக் பூசிய உதடுகள், அளவுடன் குண்டான உடல்வாகு.... சுண்டியிழுக்கும் காந்த கண்கள். இவைதான் சகானாவின் அடையாளம்.
ஆயிரம் பொய்யை சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பார்கள். ஆனால் சகானா ஒரே பொய்யில் பல இளைஞர்களை தாலி கட்ட வைத்து தவிக்க வைத்தவள். இளைஞர்களை வேட்டையாட பெரும்பாலும் சகானா தேர்வு செய்த இடம் ஷாப்பிங் மால்கள். இங்குதான் இளைஞர்களும், இளம்பெண்களும் ஊதாரித்தனமான செலவுகளை கூட கவுரவமாக நினைத்து வருகிறார்கள். இந்த மாதிரி மால்களில் நளினமான உடல் அசைவுகளுடன் நடந்து செல்லும் சகானா தான் வீழ்த்த நினைக்கும் இளைஞனை நோக்கி மெல்லியதாய் ஒரு புன்னகையை வீசுவாள்.
அவ்வளவுதான்... ஊட்டி குளிரை ஏ.சி.யில் அனுபவித்து கொண்டிருக்கும் அந்த இளைஞனும் அவளது புன்னகை வீச்சில் வீழ்ந்து தடுமாறுவான். இதுதான் தருணம் என்று அவள் அருகே ஓட்டி, உரசியபடி “ஹாய்” என்றபடி அறிமுகப்படலத்தை அரங்கேற்றுவாள். இதில் அசடு வழியும் இளைஞர்களை கெட்டியாக பிடித்துக் கொள்வாள். சிரிக்க சிரிக்க பேசியபடியே அவன் தேர்வு செய்யும் பொருள்களை வெரிநைஸ், க்யூட், ஸ்வீட், வாவ் என்று புகழ்ந்து தள்ளுவாள். அதை கேட்டதும் இப்படி ஒரு பேரழகி நம்மை புகழ்கிறாளே என்று மனதுக்குள் மகிழும் இளைஞனும் அவளது நட்பை நாடுவான். அதை எதிர்பார்த்த சஹானாவும் தாமதமின்றி தனது செல்போன் நம்பரை கொடுத்து விட்டு சென்று விடுவாள்.
சில இடங்களில் ஐகோர்ட்டு வக்கீல் என்ற அடையாளத்துடன் கூடிய விசிட் டிங் கார்டை தவற விடுவாள். மனிதாபிமானத்தில் அதை எடுத்து “மேடம், நீங்க ஐகோர்ட்டு அட்வகேட்டா?” இதோ உங்கள் கார்டு... என்று கொடுக்கும் இளைஞர்களை கெட்டியாக பிடித்து கொள்வாள். சிரித்துக் கொண்டே நான் மேடம் இல்லை. நீங்க என்னை சகானான்னே கூப்பிடலாம். இதுதான் என்னோட நம்பர்... பேசுங்க... என்றபடி நகர்ந்து விடுவாள். அவள் நகர்ந்து சென்றாலும் இதயத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்ட அவளது உருவம் இளைஞர்களை தூக்கமின்றி தவிக்க வைக்கும்.
எப்போது பொழுது விடியும்? எப்போது அவளிடம் பேசலாம் என்று காத்திருப்பார்கள்... செல்போனில் தொடர்பு கொண்டதும் மயக்க வைக்கும் பேச்சால் சஹானா பூவாய், சஹானா சாரலாய் மனமெல்லாம் மணம் வீசுவாள். இதமாக நிறைந்து விடுவாள். இப்படியே தொடரும் நட்பு... காதலாய் மலர்ந்து கல்யாண கட்டத்தை எட்டும் போது எனது தாய்-தந்தை இறந்து விட்டனர். கேரளாவில் உள்ள எனது கோடிக்கணக்கான சொத்துக்காக உறவினர்கள் என்னை கொலை செய்ய துடிக்கிறார்கள் என்று ஒரு பிட்டை தூக்கி போடுவாள்.
ஐயோ பாவம் என்று பரிதாபப்படும் இளைஞர்கள், கட்டிக்கிட்ட சேலையாடு நீ மட்டும் வந்தால் சரி என்பார்கள். இப்படி ஏமாந்த இளைஞர்கள் வரிசையில் முதலில் போரூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் குன்றத்தூர் முருகன் கோவிலில் சகானாவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி தாலி கட்டினார். போரூர் ராமாசில் திருமண வரவேற்பும் தடபுடலாக நடந்தது.
முதலிரவு முடிந்து ஒரு சில இரவுகளை மட்டும் சரவணனுடன் பகிர்ந்து கொண்ட சகானா ரூ. 1 லட்சத்து 85 ஆயிரத்தை கறந்து விட்டு கம்பி நீட்டினாள். புளியந்தோப்பு பிரசன்னா தான் பரிதாபத்துக்குரியவர். 8 வருடமாக சஹானாவை சுற்றி வந்து காதலித்துள்ளார். இதனால் வங்கியில் கிடைக்க இருந்த வேலையையும் இழந்தார். சகானா மனைவியாக வாய்த்ததே போதும் என்ற மகிழ்ச்சியில் மண வாழ்க்கையை தொடர்ந்தார். அப்போதுதான் சுரேஷ் என்பவர் புளியந்தோப்பு மகளிர் போலீசில் பிரசன்னா மீது ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது மனைவி சகானாவை பிரசன்னா அபகரித்து விட்டார் என்பது அவரது குற்றச்சாட்டு.
போலீஸ் விசாரித்தபோது பிரசன்னா தனது திருமண ஆல்பங்களை கொண்டு காட்டினார். உண்மையை புரிந்து கொண்ட போலீசார் சகானாவை எச்சரித்து பிரசன்னாவுடன் அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்ததும் ஏற்கனவே சகானாவை மணந்து ஏமாந்த கொளத்தூர் குமரன், தி.நகர் ராஜா, அடையாறு சீனிவாசன், சரவணன், திருவெற்றியூர் சரவணன் என 7 பேர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அதன் பிறகுதான் சகானாவின் தகடுதித்த வேலைகள் வெளி உலகுக்கு தெரிய வந்தது.
திருமண உறவை கொடுத்து இல்லற சுகத்தை வாரி வழங்கி இளைஞர்களின் கனவுலக தேவதையாக வலம் வந்த சகானா வெளியே செல்லும்போது ஸ்கூட்டியில் இளஞ்சிட்டாய் பறப்பாள். ஆனால் ஒருநாள் கூட தனது கணவர்களாக ஆக்கியவர்களை உடன் அழைத்து செல்வதில்லை. உடன் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களிடம் “எனக்கு ஆபத்து உள்ளது. அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனக்கு தாலி முக்கியம்” என்று சென்டிமென்டாக பேசி சேர்ந்து செல்வதை தவிர்த்து விடுவாள்.
அதே போல் படுக்கை அறையில் சல்லாபிக்கும் போதும் நான் ஐ.ஏ.எஸ். எழுத வேண்டும். அதுவரை குழந்தை வேண்டாம் என்று செல்லமாக கெஞ்சி மஞ்சத்தையும் நாசூக்காக கையாண்டு வந்திருக்கிறாள். சகானாவை தேடி கண்டு பிடிக்கும் பணியில் சென்னை போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். கேரளாவில் ஒரு இளைஞனை கொலை செய்து விட்டு நகைகளோடு சகானா சென்னைக்கு தப்பி வந்ததாக கேரள போலீசார் கொடுத்த தகவலை அடுத்து சகானாவை தேடும் பணி சூடு பிடித்துள்ளது.

No comments:
Post a Comment