2014 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளைச் சேராத ஒருவர் பிரதமர் பதவிக்கு வர வாய்ப்புள்ளது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனது இணையத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டார்.
இதை காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல் செய்துள்ளனர். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலரும் அத்வானியில் கருத்தினால் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், அத்வானியின் கருத்தினை முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆதரித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,
‘அத்வானி ஒரு மூத்த அரசியல்வாதி. தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவாகவும் இருக்கிறார். தேசிய அளவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கலாம்’ என்றார்.
ஹசாரே குழு கலைப்பு பற்றி கேட்டபோது கருத்து தெரிவிக்க மறுத்த தேவகவுடா, ‘ஊழல் பற்றி விவாதம் நடத்துவது மிக கடினமான பணியாகும்’ என்றார்.
ஹசாரேவின் சமூக பணியிலிருந்து அரசியல் குறித்து கேட்டபோது,‘ஜெயப்பிரகாஷ் நாராயணனால் வழிநடத்தப்பட்ட ஜனதா கட்சி, 1977ல் ஆட்சியை பிடித்தது. காங்கிரசுக்கு மாற்றாக இந்திய அரசியலுக்கு புதிய பரிணாமத்தை கொடுத்தார். இது மக்களுக்கே தெரியும். அதேசமயம் ஜனதா கட்சி அளவுக்கு எந்த சமூக இயக்கமும் வளர்ச்சி அடைவது கடினம். எனினும், ஊழல் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் கடுமையாக யோசிக்க வேண்டும்’ என்று கூறினார் தேவகவுடா.

No comments:
Post a Comment