நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரம் சம்பந்தமாக பிரதமர் பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை என்று பாரதீய ஜனதா கூறிவரும் நிலையில் பாராளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் எச்சூரி இது குறித்து கூறியதாவது:-
நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வருமா என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதராவாக உள்ள ”எம்” கியூப் கட்சிகள் கையில் தான் உள்ளது. அதாவது முலாயாம் சிங், மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சிகளால் எடுக்கப்படும் முடிவை பொறுத்தே இடைத்தேர்தல் நடக்குமா அல்லது நடக்காதா என்பது உள்ளது.
அது இடது சாரி கட்சிகளிடையோ அல்லது பாரதீய ஜனதா கட்சியினரின் கையிலோ இல்லை. மத்திய கணக்கு தணிக்கை குழு சமர்பித்துள்ள 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விட பெரிய ஊழலான இந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுட்டின் மூலம், காங்கிரஸ் கட்சி இந்த அரசாங்கத்தை தவறாக பயன்படுத்தி நண்பன் முதலாளித்துவத்தின் போக்கில் தனியார்களை கொள்ளை லாபம் பெறச்செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது.
இவாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment