இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் என்.எஸ்.விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
செப்டம்பர் மாதக் கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரி செலுத்த வருகிறவர்களின் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். அதிக கவுன்டர்களை திறந்தாலும்கூட, வரிப்பணத்தை பெறுவதற்கும், மக்கள் நெருக்கடியை சமாளிக்கவும் சிரமமாக உள்ளது. மக்களும் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியதுள்ளது.
எனவே நகர மக்கள் அனைவரும் கடைசி நாளுக்கு முன்பே வரியை செலுத்துவது நல்லது. தமிழகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் சில குறிப்பிட்ட கிளைகளிலும் வரியை பணமாகவோ, காசோலையாகவோ செலுத்தலாம். அந்த வங்கிகள் வருமாறு:-
பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைட்டட் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவற்றில் வருமானவரி செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment