தமிழக முதல்வரை அநாகரீகமாகவும், இழிவுபடுத்தியும் சிங்கள இனவெறியர்கள் இலங்கையின் பல பகுதிகளில் பேனர் மற்றும் கார்ட்டூன்களை வைத்துள்ள செயல் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
தமிழ் இனப் படுகொலைக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா துணிச்சலுடன் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்த இலங்கை விளையாட்டு வீரர்களை ஜெயலலிதா திருப்பி அனுப்பினார். இந்த செயல் தமிழகத்தில் மட்டுமின்றி, உலகத்தில் உள்ள ஈழத் தமிழ் ஆர்வலர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, முதல்வருக்கு தனி மரியாதையை பெற்றுத் தந்தது.
இதனால் அவர் மீது கோபம் கொண்டுள்ள சிங்கள இனவெறியர்கள் இலங்கையில் உள்ள சில பகுதிகளில் ஜெயலலிதாவை பலவிதமாக மிகவும் கீழ்த்தரமான முறையில் கேலிச் சித்திரம் வரைந்து ஆங்காங்கே ஒட்டியுள்ளனர்.
தமிழக முதல்வரையே இவ்வளவு கேவலமாக சித்தரிக்கும் இந்த வெறியர்கள் கைகளில் சிக்கிய தமிழ் இன பெண்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என சற்று நினைத்து பார்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகிறது.
No comments:
Post a Comment