Saturday, October 25, 2014

கூகுள் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை நியமனம்

கூகுள் நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகளுக்கான தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளான கூகுள் மேப், கூகுள் பிளஸ், வர்த்தகம், விளம்பரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய பிரிவுகளின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த லாரி பேஜ் தனது பொறுப்பிலிருந்து விடை பெறுவதை அடுத்து அந்த பொறுப்பில் சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை என்ற தொழில்நுட்ப வல்லுநரை நியமித்துள்ளார்.


பிச்சை சுந்திரராஜன் (42), கோரக்ப்பூர் ..டி.டியில் தொழில்நுட்ப கல்வி படித்தவர் ஆவார். பின்னர் தனது மேல் படிப்புகளை ஸ்டான்போர்ட் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகங்களில் முடித்துள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கிய சுந்தர் பிச்சை தற்போது உயரிய பொறுப்பை அடைந்துள்ளார்.

No comments:

Post a Comment