விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, April 17, 2011

    மீன்பிடிக்க தடை: 45 நாட்கள் மீனவர்கள் படும் பாடு-வைகோ


    45 நாள்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கால கட்டத்தில் மீனவர்களுக்கு அரசு தரும் உதவித் தொகை போதுமானதாக இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

    குடும்ப அட்டையைக் கணக்கில் கொண்டு உதவித் தொகை வழங்காமல், மீனவர் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ள மீன்பிடித் தொழில் செய்யும் ஆண்களுக்கும், மீன்களை விற்பனை செய்யும் பெண்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதர்களைத் தவிர உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் இனப்பெருக்கம் செய்ய பருவகாலங்கள் உண்டு. தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாள்கள் மீன்களின் இனப்பெருக்கக் காலம்.

    இதில் மீனவர்களுக்கு நன்மை இருப்பினும் இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப்படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கக் கூடாது. இருப்பினும், கட்டுமரம், பைபர் போட் மீனவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாவிடினும் கோடைக்காலங்களில் கடலில் திடீர் என்று ஏற்படும் சூறைக்காற்று மற்றும் புயல் காற்றால் கடலில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும்.

    எனவே ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என 1,076 கி.மீ. பரந்துபட்ட கடலில் 45 நாள்கள் மீன்பிடிக்காததால் ஏற்படும் பொருளாதார இழப்பால் அவர்கள் படும் துயரம் அதிகம்.

    வசந்தத்தை வரவேற்கும் சித்திரை முதல் நாளில் நெய்தல் நில மக்கள் வறுமையை வரவேற்பதாய் இந்த 45 நாள்கள் அமைகின்றது. ஆண்டின் 365 நாள்களில் இனப்பெருக்கக் காலம், புயல், மழைக்காலம், கடல் சீற்றம், கடல் பஞ்சம், பண்டிகை, திருவிழாக் காலங்கள் என்று போக மீதம் 150 நாள்கள்தான் மீன்பிடித் தொழிலில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

    குறிப்பாக, அரசு அறிவித்துள்ள இந்த மீன்பிடித் தடைக்காலத்தில்தான் பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பிக்கக் கட்டணம், கல்லூரிப் படிப்பு முடிந்தவர்களுக்குத் திருமணம், சித்திரை வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்படும் நோய்கள் என்று அடுக்கடுக்காக செலவுகள் வந்துகொண்டே இருக்கும்.

    45 நாள்கள் மீன்பிடி தடைக்காலத்தில் அரசு தரப்பில் தரப்படும் உதவித் தொகை என்பது விலைவாசி உயர்ந்துள்ள இக்காலகட்டத்திற்குப் போதுமானதாக இல்லை.

    குடும்ப அட்டையைக் கணக்கில் கொண்டு உதவித் தொகை வழங்கப்படுவதால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தந்தை, மகன்கள் என்று கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் இதில் ஏமாற்றம் அடைகின்றனர். இதற்கு மாறாக மீனவர் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ள மீன்பிடித் தொழில் செய்யும் ஆண்களுக்கும், மீன்களை விற்பனை செய்யும் பெண்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.

    விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 100 வழங்குவதைப் போன்று மீனவர்களைப் பாரம்பரிய மீனவப் பழங்குடி இனத்தவராக அறிவித்து, குறைந்தபட்சம் 45 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கி நாள் ஒன்றுக்கு ரூ. 100 வீதம் 45 நாள்களுக்கு ரூ. 4,500 உதவித் தொகை வழங்குவது நன்மை பயக்கும்.

    வட தமிழ்நாட்டில் மீன்பிடித் தொழிலில் குறைந்தபட்ச வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லை. தென் தமிழ்நாட்டில் கடலில் மீன்பிடிக்கச் சென்று உயிரோடு கரை திரும்புவோம் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையை சிங்கள ராணுவம் உருவாக்கியுள்ளது.

    இதனால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் திருமணமாகாத இளைஞர்களுக்குப் பெண் கொடுக்க மறுக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் கடல் கடந்து பிற நாட்டுப் பட்டினங்களில் வாணிபம் செய்து செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த பட்டினத்தவர்களான நெய்தல் நில மக்கள் இன்று பட்டினி கிடக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

    கடலாளிகளான பருவதராஜகுல மக்களுக்கு கடல் சொந்தமாக உள்ளதோ இல்லையோ, அவர்கள் கடனாளியாக உள்ளார்கள் என்பது மட்டும் உண்மை.

    இந்த நிலை மாறி, மீன்பிடித் தொழிலை ஊக்குவித்திட இயற்கை முகத்துவாரங்கள் அருகில் மீன்பிடித் துறைமுகங்களை மத்திய- மாநில அரசுகள் அமைத்துத் தந்திட வேண்டும். முகத்துவாரம் இல்லாத பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் போதுமான தூண்டில் வளைவு மீன்பிடித் துறைமுகங்களை அமைத்துத் தர வேண்டும்.

    கடலும் ஆறும் சேருகின்ற இயற்கை முகத்துவாரப் பகுதிகளில்தான் இறால், நண்டு போன்றவை இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், தற்போது அப்பகுதிகளில் சாக்கடை நீர், ரசாயனம் கலந்த ஆலைக் கழிவு நீரால் மாசு அடைந்து இனப்பெருக்கம் தடைபடுகிறது. எனவே, இதை கருத்தில் கொண்டு நீர் மாசுபடாமல் இருக்க தூய்மைப்படுத்தப்பட்ட நீர் மட்டுமே முகத்துவாரம் வழியாக வந்து கடலில் கலப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

    இந்த 45 நாள்கள் மீன்பிடித் தடைக் காலங்களில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் தடையை மீறி மீன் பிடிக்காமல் இருக்க கண்காணிப்பது மிகவும் அவசியம்.

    ஊதியம் பெறாமல் பரந்துபட்ட 1,076 கி.மீ. கடல் எல்லையைப் பாதுகாத்து வரும் தமிழக மீனவர்களைப் பாதுகாப்பது மத்திய- மாநில அரசுகளின் கடமையாகும் என்று கூறியுள்ளார் வைகோ.


    Posted by விழியே பேசு... at 4:34 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ▼  April (772)
      • படமாகிறது சாய்பாபா வரலாறு
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : பிகினி அணிய தைரியம்...
      • கமலின் முத்தத்திற்கு ரூ.1.25கோடி கேட்ட தமன்னா!
      • விஜய்க்கு ஆப்பு ஆரம்பம் ; 'பொன்னியின் செல்வன் கைவி...
      • அருணாச்சல பிரதேச முதல்வர் நிலை என்ன? மாறுபட்ட கருத...
      • காஸ்டியூம் டிசைனராக மாறினார் அமலா பால்!
      • மீண்டும் மாற்றப்படுகிறது விக்ரம் பட தலைப்பு!
      • நண்பன் க்ளைமாக்ஸ்
      • பொன்னர் - சங்கருக்கும் காவலன் நிலைமைதானாம்!
      • சோனா நமீதாக்களுக்கு சூப்! - வந்தார் ஒரு கேரள அழகி
      • காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசலா? : ஜெயந்தி ...
      • ரஜினி, அஜீத், பாலசந்தர், கட்டபுள்ள... கோலிவுட்டை ச...
      • கருணாநிதி குடும்பத்தினர் அனைவர் பெயரையும் குற்றப்ப...
      • ராஜபக்சேவை தூக்கிலிடக் கோரி ஆர்ப்பாட்டம்
      • வடிவேலுக்கெல்லாம் பதில் சொல்வதா? கே.எஸ்.ரவிகுமார் ...
      • சைக்கோ வில்லன் ஆனார் விவேக்
      • கமல் - ஸ்ரீதேவி மீண்டும் ஜோடி..?
      • உடல் நலக்குறைவு; “ராணா” படப்பிடிப்பு ரத்து ; மீண்ட...
      • நடிகர் விக்ரம் வீடு முன்பு ஆர்ப்பாட்டம்: 100 பேர் ...
      • நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோல...
      • என் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் ஈடுபட்டால் ...
      • இலங்கை போர்க்குற்ற அறிக்கை குறித்து விவாதிக்க நாடா...
      • சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!
      • கோப்புகள் அழிப்பு: அ.தி.மு.க., புகார் பின்னணி
      • நடிகை சொர்ணாவுக்கு சிறை தண்டனை உறுதி: ஐகோர்ட்
      • தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மு.க.ஸ்டாலினுக்கு முதல்...
      • 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் ப...
      • கால்ஷீட்டுக்கு பணம் தேனிலவு செலவும் ஃப்ரீ! -வித்த...
      • சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீச்சு
      • “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; சூட்டிங் ஸ்பாட் புகை...
      • சிரஞ்சீவி கேட்ட உதவி கே.பாக்யராஜ் பெருமிதம்!
      • வேட்டையில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மாதவன்
      • ராஜபக்சேவை தண்டிக்க இந்தியா முட்டுக் கட்டையாக நிற்...
      • ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் : கலைஞர் பேட்டி - பட...
      • லிம்கா சாதனை படைத்த கன்னட சினிமா
      • வெளிநாடா, உள்ளூரா... வடிவேலு விஷயத்தில் டமால்!
      • திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!- ஹெட்லைன்ஸ் டுடே க...
      • மருத்துவமனையில் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார...
      • ரவிக்குமார் பேச்சு, நேற்றோடு போச்சு! -ராணா டைட்டி...
      • சாய்பாபா வாரிசையும் நியமிக்கவில்லை, உயிலையும் எழுத...
      • ஐ.நா. நிபுணர்கள் குழு, முட்டாள்கள்: இலங்கை அமைச்சர்
      • மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத்...
      • ரஜினி நலம்: 'சாதாரண செக்கப்தான், அதற்குள் வதந்தியா?'
      • தீவிர சிகிச்சைப்பிரிவில் ரஜினிகாந்த் அனுமதி : பலத...
      • ரசிகர்கள் எதிர்பார்ப்பு; விஜய் பிறந்த நாளில் வேலாய...
      • வந்துவிட்டார் வில்லியம், காக்க வைப்பாரா கேட்? : நே...
      • குடும்பத்துடன் விஜயகாந்த் வெளிநாட்டுக்கு எஸ்கேப்
      • விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ரஜினி படத்தில...
      • தரம் கெட்டு போன சிம்பு: பாவனா தாக்கு!
      • 'எக்ஸ்ட்ரா பைசா ஆகும், பரவால்லயா!!' - அனுஷ்கா
      • துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!
      • வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க ராசா மறுப்பு
      • பிஏசி கூட்டத்தில் அரங்கேறிய கூத்துகள்... ஒரு வாக்க...
      • ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனித சங்கிலி ...
      • தவறான சிகிச்சையால் கண்பார்வை இழந்த மாணவிக்கு சிகிச...
      • சாய்பாபா என்னை ஜெயிலில் சந்தித்தார்: அத்வானி
      • விஜய் பட விழா : ஜெ. பங்கேற்பதில் சிக்கல்
      • ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!
      • காதலில் தோல்வி : கிரண்!
      • சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத்...
      • மே 14ல் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்: ஜெ., வரு...
      • ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி கி.வ...
      • நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்... 'திரும்ப வந்தா...
      • ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்... அதிகாரப்பூர்வ அறிவி...
      • 50 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரனை சுட்டு பிட...
      • தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி
      • மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த ரஜினியின...
      • சாய்பாபா மரணம் குறித்த சர்ச்சை : ஆந்திர அரசு விளக்கம்
      • 'நான் அழகிரி மகன்டா ... கருணாநிதி பேரன்ல்ல...ரூ. 1...
      • ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இல...
      • இலங்கை அரசின் போர்க் குற்றம்: ஐ.நா.சபை அறிக்கை குற...
      • ஐ.நா. அறிக்கை: வெளிநாட்டு தூதுவரகளை மீண்டும் சந்தி...
      • ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானாரா?: கருணா...
      • 2ஜி.. ராசா மீது குற்றச்சாட்டு, தாக்கப்படும் PMO, ப...
      • ஏப் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர்! சாய்பாபா மர...
      • ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்
      • போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மன்றத்தினர் :அபராதம்
      • காங்கிரசை ஜெ., தாக்கி பேசாததற்கு காரணம் என்ன?
      • ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ...
      • மங்காத்தாவில் அஜீத்துக்கு நெகடிவ் ரோல்!
      • உதயநிதி ஸ்டாலினின் ஃபார்முலா
      • எனக்கு கல்யாணமா? - பதறும் 'கவர்ச்சி' கிரண்
      • நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? - 'கோ' பியா
      • அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்டு அசிங்கப்பட...
      • வீரப்பன் சினிமா: தயாரிப்பு-முத்துலட்சுமி; டைரக்ஷன்...
      • கற்பழிப்பு வழக்கில் பிரபலஇந்தி நடிகருக்கு ஜாமீன்!
      • விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா
      • ஐ.நா அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் க...
      • தமிழக எல்லையில் நடிகர் கலாபவன் மணி ஆய்வு
      • பாபா மே 14ல் மீண்டும் வருவார்? ;புட்டபர்த்தியில் ப...
      • கைவிரித்தார் பான் கீ மூன்
      • நடிகர் கார்த்திக்கு திருமணம் முடிவானது
      • நாட்டை பற்றி கவலை... வீட்டை பிடுங்கும் நிலைமை? -ஒர...
      • ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது - எட்டப்பன் ...
      • வடிவேலு வேண்டாம் ; வடிவேலுக்கு ரஜினி வைத்த ஆப்பு
      • சிங்கள ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்-புதிய ஆத...
      • இதுவரை வெளிவராத அதி பயங்கர போர்க்குற்ற காட்சிகளை ஒ...
      • 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா? கல...
      • சத்ய சாய்பாபா பக்தர்களை கடுப்பேற்றிய நித்யானந்தா!
      • இலங்கையின் போர்க் குற்றம்-மத்திய அரசுக்கு திமுக 'த...
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.