திருவள்ளூர் அருகே திமுகவினர் குடிபோதையில் பாமகவினரை தாக்கியதால் அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் ஆனந்தன் (23). இவர் தனது நண்பர் சுரேஷ் (23) மற்றும் மஞ்சுளா (35) ஆகியோருடன் லட்சுமி தெரு வழியாக நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் கணேசன், செந்தில், குட்டி, வெங்கடேசன் ஆகியோர் இவர்களை வழிமறித்து குடிபோதையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஆனந்தன், சுரேஷ், மஞ்சுளா ஆகிய மூவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் திமுக ஒன்றிய கவுன்சிலர் அரிகிருஷ்ணன், கண்ணன், ராஜேஷ், அமரன், மஞ்சுளா ஆகியோர் வழக்கறிஞர் யோகநாதன் வீட்டுக்கு சென்று ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகின்றது.
இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் தாங்கள் கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பாமகவினர் சென்னை- திருவள்ளூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இன்றைய செய்திகள்...
- அவன் இவனை அபகரித்த சன் டிவி!
- "49 ஓ'வுக்கு நல்ல வரவேற்பு
- ஹீரோயின் ஓகே..! ஹீரோ நோ நோ..!
- ஐ.நா. சபை சில நாடுகளின் பகடை காயாக மாறிவிட்டது :இல...
- கவர்ச்சியில் இருந்து காமெடிக்கு....
- மறுபடியும் வருவேன் - தமன்னா உருக்கம்
- கொலைமிரட்டல் எதிரொலி அதிமுக வேட்பாளருக்கு துப்பாக்...
- திருவள்ளூர் அருகே பாமகவினரை தாக்கிய திமுகவினர்
- மீன்பிடிக்க தடை: 45 நாட்கள் மீனவர்கள் படும் பாடு-வ...
- மீனவர்களைக் கொன்ற இலங்கையின் மீது இந்தியா போர் தொட...
- தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல்-ஜெய...
- பணம் பட்டுவாடா-மதுரை மேற்கு தொகுதிக்கு மறு தேர்தல்...
- தேர்தலில் இதுவரை இல்லாத அளவு வாக்குப்பதிவு ஏன்?
- மின்சார நாற்காலி தண்டனையையும் மகிழ்சியாக ஏற்றுக்...
- சீமான் கனவை நிறைவேற்ற முயற்சிக்கிறார் தங்கபாலு : ...
- ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார் : எஸ்.வி.சேக...
- இலங்கையில் மீன்களை அணுக்கதிர் தாக்கியதாக பீதி
- இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள்... ஐ.நா. நிபு...
- எம்.எல்.ஏ., விலை ரூ.50 கோடி: குதிரை பேரத்திற்கு தி...

No comments:
Post a Comment