மக்களுடன் கூட்டணி, தாம்தான் முதல் அமைச்சர் என்று கூறி வந்த விஜயகாந்த் தற்போது கடையில் நிற்கிறார் என்றும், விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் தோற்பது உறுதி என்றும் மத்திய அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தேமுதிக மற்றும் அதிமுகவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் மு.க.அழகிரி,
தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்களிடையே மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதே எழுச்சியுடன் தொண்டர்கள் பணியாற்றி வாக்குப்பதிவை வெற்றி செய்ய வெண்டும்.
மக்களுடன் கூட்டணி, தாம்தான் முதல் அமைச்சர் என்று கூறி வந்த விஜயகாந்த் தற்போது கடையில் நிற்கிறார். தமது கட்சி வேட்பாளரை பொதுஇடங்களில் தாக்கும் விஜயகாந்த், ரிஷிவந்தியம் தொகுதியில் தோற்பது நிச்சயம். 6வது முறையாக முதல் அமைச்சராக கலைஞர் பதவி ஏற்பார் என்றார்.
No comments:
Post a Comment