ஊத்துக்கோட்டையில் உள்ள தலைவர்கள் சிலை மீது கட்டப்பட்டு இருந்து துணிகளை தேர்தல் கமிஷன் விதிமுறையை மீறி மர்ம நபர்கள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் கட்சிக் கொடிகள், தலைவர்களின் சிலைகள் துணிகளால் மறைக்கப்பட்டு இருந்தது. வாக்குப்பதிவு முடிந்த சில நாளில், ஊத்துக்கோட்டையில் பெரியார், காமராஜர், எம்ஜிஆர் ஆகியோரின் சிலைகளில் இருந்து துணிகள் அகற்றப்பட்டுவிட்டன. அண்ணா சிலை மட்டும் மூடி இருக்கிறது.
“தலைவர்கள் சிலையில் உள்ள துணிகளை அகற்றியது பற்றி தெரியாது என கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். தேர்தல் விதிமுறை மீறியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என ஊத்துக்கோட்டை பகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

No comments:
Post a Comment