தேனி மாவட்டம், போடி தொகுதி சங்கராபுரம் ஊராட்சியில் ஓட்டுசாவடி எண் 146 ல் 940 ஓட்டுகள் உள்ளன. இதில் 684 ஓட்டுகள் பதிவு செய்துள்ளதாக கணக்கிடப்பட்டது. ஆனால் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 656 ஓட்டுக்களே பதிவாகி இருந்தது. இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கட்சி பூத் ஏஜென்ட்கள் கூறியதால், நேற்று மறு ஓட்டுப்பதிவு நடந்தது.
ஓட்டுப்பதிவு துவங்கிய சிறிது நேரத்தில் தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் ஓட்டு சாவடி வரை காரில் சென்று, ஓட்டுப்பதிவை பார்வையிட்டு திரும்பினார்.
அடுத்ததாக அ.தி.மு.க, வேட்பாள் ஓ. பன்னீர் செல்வம் காரில் வந்தபோது, பாதுகாப்பு பணியில் இருந்த ஏ.டி.எஸ்.பி., சாமிதுரைவேலு தடுத்து நிறுத்தினார். காரில் செல்ல அனுமதியில்லை. வேட்பாளர் உடன் இருவர் வேண்டுமானால் நடந்து செல்லலாம்,'' என கூறினார்.
இதற்கு, காலையில் தி.மு.க., வேட்பாளர் லட்சுமணனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்,என பன்னீர்செல்வம் கேட்டார். அப்போது நான் இல்லை, இதுபற்றி எனக்கு தெரியாது, இப்போது நீங்கள் காரில் செல்ல அனுமதியில்லை,'' என ஏ.டி.எஸ்.பி., கூறினார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரின் அனுமதியை எதிர்பார்க்காமல் காரில் சென்றார். ஆத்திரமடைந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் போலீஸ் அதிகாரியை முற்றுகையிட்டனர்.

No comments:
Post a Comment