தமிழக சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையிலும் செயல்பட்ட 19 பேர் நீக்கப்பட்டனர்.
கட்சியினரை நீக்க தங்கபாலுவிற்கு உரிமை இல்லை என்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கட்சிக்கு பாதகமாக செயல்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்களை நீக்க தங்கபாலுவிற்கு அதிகாரம் உண்டு என, காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவு தலைவர் ஜனார்தன திவேதி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைமை நிலையச் செயலர் மகபூல் ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment