தேர்தல் முடிந்த பிறகும் திருமண மண்டபங்களில் நடைபெறும் விசேஷங்கள், லாட்ஜ்களில் தங்குவோர் விபரம் சேகரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடந்தது. வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு பொருட்கள் வழங்குவதை தடுப்பதில் தேர்தலுக்கு முன்னரே மாநில தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் செயல்பட்டது.
தொகுதி வாரியாக தேர்தல் கண்காணிப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்தனர். புகார்களின் அடிப்படையில் அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 234 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள திருமண மண்டபங்களில் நடைபெறும் விசேஷங்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்த விபரங்களை தேர்தலுக்கு முன்பிருந்து அதிகாரிகள் தினமும் சேகரித்தனர்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 13ம் தேதி நடக்கவுள்ளதால், அனைத்து தொகுதிகளிலும் உள்ள லாட்ஜ்களில் தங்குவோர், திருமண மண்டபங்களில் நடைபெறும் விசேஷங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து சேகரிக்க உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் இத்தகைய விபரங்களை விஏஓக்கள் தினசரி சேகரித்து, தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இதனை கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர்களின் பார்வைக்கு தினமும் அனுப்பி வைக்கின்றனர்.
இதுகுறித்து தேர்தல் அலுவலர் ஒருவர் கூறுகையில், 1397967985 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் முதல் நாளிலிருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டது.
மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து, 15ம் தேதி வரை கண்காணிப்பு தொடரும். தேர்தல் ஆணைய உத்தரவையடுத்து திருமண மண்டபங்களின் விசேஷங்கள், லாட்ஜ்களில் தங்குவோர் விபரங்கள் சேகரிக்கும் பணி நிறுத்தப்படும்’ என்றார்.

No comments:
Post a Comment