வரும் 29ம் தேதி இளவரசர் வில்லியமை திருமணம் செய்யும் கேட் மிடில்டன், மூன்றாவது அழகிய இளவரசி என்ற சிறப்பு பெறுவார் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
பியூட்டிபுல் பீபிள்.காம் என்னும் இணையதளம் 1 லட்சத்து 27 ஆயிரம் பேரிடம் அழகான ராஜபரம்பரையினர் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. இதில் கேட்டிற்கு ஆதரவாக 84 சதவீதத்தினரும், டயானாவுக்கு ஆதரவாக 82 சதவீதத்தினரும் வாக்களித்தனர்.
இந்த அழகிய கணக்கெடுப்பில் மொனாகோ இளவரசியும், ஆஸ்கார் விருது பெற்ற நடிகையுமான கிரேஸ் கெல்லி 91 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். 90 சதவீத வாக்குகளுடன் ஜோர்டான் ராணி ராணியா இரண்டாவது இடத்திலும், கேட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதேபோன்று ராஜ குடும்பத்து ஆண்களில் அழகானவர்கள் பற்றி எடுத்த கணக்கெடுப்பில் இளவரசர்கள் ஹாரி மற்றும் வில்லியம் 4, 5 ஆகிய இடங்களைப் பிடித்தனர். அவர்களின் தந்தை இளவரசர் சார்லஸ் 10-வது இடத்தில் உள்ளார்.
கேட் மற்றும் வில்லியம் திருமணம் வரும் 29-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஆபியில் நடக்கிறது. இவர்கள் திருமணத்தைப் பற்றி தான் உலகமே பேசிக் கொண்டிருக்கிறது.

No comments:
Post a Comment