வாக்குகள் மூலமாக பொதுமக்கள் அமைதிப்புரட்சியை ஏற்படுத்தி உள்ளனர் என்று ஜெயலலிதா கூறினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தேர்தல் கமிஷனின் சிறப்பான நடவடிக்கைகளால் தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில சம்பவங்களை தவிர அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற வில்லை.
தேர்தல் கமிஷனுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். தி.மு.க. ஆட்சியின் மீது பொதுமக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். வாக்குகள் மூலமாக அமைதிப்புரட்சியை ஏற்படுத்தி உள்ளனர் என்றார்.

No comments:
Post a Comment