மங்காத்தா படத்தை அடுத்து, அஜீத் நடிக்க இருக்கும் திரைப்படம் பில்லா 2. பில்லா படத்தை தயாரித்த நடிகர் பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜியே இரண்டாம் பாகத்தையும் இந்துஜா குழுமத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறார்.
பில்லா 2 தயாராகப் போகிறது என்றவுடனே எழுந்த கேள்வி படத்தின் நாயகி யார் என்பது. இதனை அடுத்து பில்லாவில் நடித்த நயன்தாராவே இதிலும் நடிப்பார் என்றும், இல்லை தெலுங்கு பில்லாவில் நாயகியாக நடித்த அனுஷ்கா தான் நடிப்பார் என்றும் தகவல்கள் வர ஆரம்பித்தன
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று டெல்லியைச் சேர்ந்த பிரபல மாடல் ஹூமா குரேஷியை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தற்போது மும்பையில் வசித்து வரும் ஹூமா, அமீர்கானுடன் பிரபல செல்போன் விளம்பரத்தில் நடித்து புகழ்பெற்றவர். இது தவிர, பாலிவுட்டின் ஆஃப் பீட் இயக்குனர், அனுராக் காஷ்யாப்பின் ‘ கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்தில் காதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் 'சுப்பிரமணியபுரம்' படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.

No comments:
Post a Comment