விஜயின் தம்பியாக ஒரு படத்தில் நடித்தபோதுதான் வெளியே அடையாளம் தெரிந்தார் ஜெய். ஆனால் சுப்ரமணியபுரம் படத்தில் காதலுக்காக உருகி, நட்புக்காக கொலைகள் செய்து, காதலியின் கண்முன் கொலையாகும் கதாபாத்திரத்தில் ஜெய்யை அழகர் கதாபாத்திரத்தில் வாழ வைத்திருந்தார் இயக்குனர் சசிகுமார். அந்தப்படத்துக்குப் பிறகு கோலிவுட் ரேஸில் முன்னனி இடைத்தை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய் கையில் இப்போது ஒரே ஒரு படம்தான் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் சரவணன் இயக்கிவரும் எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் மட்டுமே நடித்து வரும் ஜெய், இந்தப் படம் விழுந்து நொறுங்கிய தனது மார்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்தும் என்று நம்பிக் கொண்டிருக்கிறாம். ஏன் ஜெய்க்கு யாரும் கதை சொல்ல வரவில்லையா என்று விசாரித்தால், வருகிறார்கள். ஆனால் 25 லட்சம் சம்பளம் வாங்கொள்ளச் சொல்கிறார்கள் ஒரு கோடி சம்பளம் வாங்கிவிட்டு எப்படி இத்தனை குறைவாக சம்பளம் வாங்க முடியும் என்பதால்தான் படங்களை மறுத்து வருகிறாராம்.
இதற்கிடையில் மங்காத்தா படப்பிடிப்புக்கு வெங்கட்பிரபு கூப்பிட அங்கே அஜித்தை சந்தித்திருகிறார் ஜெய். அங்கே முகிழ்த்த நட்பு, அவ்வப்போது ஜெய்யை தனது அலுவலகத்திற்கு வரவழைக்கும் அஜித், தன்னம்பிக்கை தரும்படி பேசுவாராம் இவரிடம். இவ்வளவு ஹீரோக்கள் இருக்காங்க. என்கிட்ட மட்டும் அன்பா இருக்கீங்களே என்று ஜெய் கேட்டதற்கு, நான் அமராவதி படத்தில் அறிமுகமாகும் போது எப்படியிருந்தேனோ அப்படி இருக்கே என்றாராம் ஜெய்யிடம். இதைக்கேட்டு கண் கலங்கிய ஜெய்யிடம் “ கவலைப்பாடாமல் இரு. நாம சேர்ந்து பண்னுவோம்” என்று தைரியம் கொடுத்திருக்கிறததாம் தல! அதுதான் தல!

No comments:
Post a Comment