பணம் வாங்கிக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை சசிகலா தேர்வு செய்துள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அதிமுகவுக்காக உழைத்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதிமுகவில் குரங்காட்டிபோல் சசிகலா செயல்படுகிறார். பணம் வாங்கிக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை சசிகலா தேர்வு செய்துள்ளார். ஆகையால் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. எனவே ஜெயலலிதா முதல் அமைச்சராக ஆகுவதற்கு வாய்ப்பே இல்லை.
மது அருந்தும் பழக்கத்தில் விழுந்து கிடக்கும் நடிகர் விஜயகாந்த்துக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்றார்.

No comments:
Post a Comment