தங்கபாலுவுக்கு மீனவர்கள் பிரச்சினையில் அக்கறை வந்திருக்குமானால் அவர் உண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியது இனி ஒரு மீனவரின் உயிரும் பறிக்கப்பட மாட்டாது என்று சில நாட்களுக்கு முன் உறுதிமொழி அளித்துச் சென்ற சோனியாவின் வீட்டின் முன்னால் தான். ஆனால் மக்களை ஏமாற்றவும் தனது பதவியைக் காப்பாற்றவும் தங்கபாலு நாடகம் நடிக்கிறார் என சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆறுதல் கூட சொன்னதில்லை
560க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களப்படை இதுவரை கொன்று குவித்திருக்கிறது. இவ்வாறு மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு முழு முதற் காரணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியே ஆகும்.
ராமேசுவரத்திலும், நாகையிலும் தமிழ் மீனவன் உயிரிழந்து, தலை துண்டிக்கப்பட்டு, கை கால்கள் இழந்து, சித்திரவதைக்கு சிங்கள ராணுவத்தால் உள்ளாக்கப்பட்டு, அவனது வலைகள் அறுக்கப்பட்டு நிர்க்கதியாய் கரை வந்து சேர்ந்த பொழுது மத்திய காங்கிரஸ் ஆட்சி என்ன செய்தது? மீனவனின் உயிரை கூட மதிக்காமல் குறைந்த பட்சம் அவனுக்கு ஒரு ஆறுதல் கூடச் சொல்லாமல் வேடிக்கை பார்த்தது.
பதவியை காப்பாற்ற
மீனவர்கள் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாட்டில் குரல் கொடுத்தால் அவர்களை ஒடுக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தி சிறைக்குள் தள்ளும் கட்சி கொலை செய்த சிங்களக் கடற்படையின் அதிபருக்கு இந்தியாவில் ரத்தினக் கம்பள வரவேற்பு அளித்தது. இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கையை ஐ.நா.சபையே போர்க்குற்றம் புரிந்தது என்று தற்பொழுது அறிவித்துள்ளது.
இந்த கசப்பான உண்மைகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கும் தங்கபாலுவுக்கும் நன்கு தெரியும். ஆனால் தமிழர்களை மடையர்களாக எண்ணி உட்கட்சிப் பிரச்சினையிலும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் தோல்வி அடையும் என்ற நிலையிலும் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும் தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு என்ற பெயரில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் என்று நடத்தியுள்ளார்.
வீட்டை முற்றுகையிடுவோம்
தங்கபாலுவுக்கு மீனவர்கள் பிரச்சினையில் காலம் கடந்தாவது அக்கறை வந்திருக்குமானால் அவர் உண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியது இனி ஒரு மீனவரின் உயிரும் பறிக்கப்பட மாட்டாது என்று சில நாட்களுக்கு முன் உறுதிமொழி அளித்துச் சென்ற சோனியாவின் வீட்டின் முன்னால் தான். ஆனால் மக்களை ஏமாற்றவும் தனது பதவியைக் காப்பாற்றவும் நாடகம் நடிக்கிறார்.
இந்த நாடக வேடம் அவருக்குப் பொருந்தவில்லை. படுகேவலமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இருக்கிறது. தனது பதவியைக் காப்பாற்ற மீனவர்களின் மரணத்தைப் பயன்படுத்தும் இது போன்ற மிகவும் இழிவான செயல்களில் தங்கபாலு இனியும் ஈடுபடுவாரானால் அதனை நாம் அனுமதிக்க முடியாது. அவரது வீட்டு முன் நாம் தமிழர் கட்சி முற்றுகைப் போராட்டம் நடத்தும் என்று கடுமையாக எச்சரிக்கிறேன்.
ஐ.நா. பரிந்துரை நியாயமற்றது
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இலங்கை அரசு படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், வன்னி முள்வேலி முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது பன்னாட்டு சட்டங்களின் கீழ் இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை நியாயமற்றது, முறையற்றது. இது உலகத் தமிழினத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அங்கு நடந்த தமிழின அழிப்பிற்குக் காரணமான இலங்கை அரசு தண்டிக்கப்பட வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை இன்றியமையாதது. இரண்டாவது, ஈழத் தமிழினத்தின் தேச, அரசியல் விடுதலையை உறுதிசெய்ய பன்னாட்டு கண்காணிப்பின் கீழ் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இவை இரண்டையும் ஐ.நா. செய்யத் தவறுமானால், அது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையை மறைக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஐ.நா.விற்கு எதிராக உலகத் தமிழினம் பொங்கி எழும் என்று எச்சரிக்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாடகர் - பாடலாசிரியர்களை கவுரவித்த வசனகர்த்தா!
- படத்தை போட்ட சோப் கம்பெனியிடம் ரூ.1 கோடி கேட்கிறார...
- தேர்தலில் பணம் வினியோகித்ததால் வாக்காளர் பட்டியலில...
- பொன்னர் சங்கர் ரீ-சூட்டிங்!
- நார்வே சென்ற இயக்குனர் பட்டாளம்!
- ஓட்டு எண்ணும் மையங்களில் அடியாட்கள் நுழைய வாய்ப்பு...
- ஜெ. புதிய மனு : நாளை விசாரணை
- நண்பனால் பகைவன் ஆகும் ஹீரோக்கள்
- மும்பை கடல் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கப்...
- குவாட்டர் அடிச்சு அடிச்சு இப்ப 'நைன்ட்டி' இல்லாம த...
- விஜய் கல்லெறி படாமல் தப்பியது எப்படி ?
- மே 13-ல் ஓட்டு எண்ணிக்கை: 17-ந்தேதி காலை 9.30 மணிக...
- பேரணியா? இலங்கைக்கு ஐநா எச்சரிக்கை!
- பணம் வாங்கிக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை சசிகலா தேர...
- தங்கபாலு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியது சோனியாவின் வ...
- ஜூனில் விவாகரத்து... சொத்துக்களை ரம்லத்துக்கு எழுத...
- 'விஜய்' வீடு மீது தாக்குதல்!!
- மே 13 தேர்தல் முடிவு...மே 14 ப்ளஸ் டூ தேர்வு முடிவ...
- தமிழக சட்டசபை தேர்தல் நாள் ஜாதகம் : எப்படியெல்லாம்...
- இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தம...
- கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் சுற்றும் பிரபல...
- ஹசாரேவை விமர்சிப்பதா? ராகுலுக்கு மோடி கண்டனம்
- ரிஷிவந்தியம் தொகுதியில் அதிகளவில் பெண்கள் ஓட்டளித்...
- தலைவர்கள் சிலையை மறைத்து கட்டப்பட்ட துணிகள் அகற்ற...
- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...

No comments:
Post a Comment