திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த 5 பேர் கொண்ட கும்பலை பெங்களூர் உப்பார்பேட்டை போலீசார், கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த யோகிஸ் (வயது 26), சதீஷ் (28), தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவை சேர்ந்த ராமா (28), மண்டியாவை சேர்ந்த வினய் (27), அரக்கல்கூடுவை சேர்ந்த தினேஷ் (25) என்பது விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் 5 பேரும் மாகடிரோடு, ராஜாஜிநகர், மல்லேசுவரம், கப்பன்பூங்கா ஆகிய இடங்களில் தனியாக நிற்கும் மோட்டார் சைக்கிள்களை ஹாசன், மண்டியா மாவட்டங்களில் வசிக்கும் கிராமப்புற மக்களிடம் ரூ.5 ஆயிரம், 6 ஆயிரம் என விலைபேசி விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். இதுதவிர பி.எம்.டி.சி. கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் நிலையத்தில் பயணிகளிடம் தங்க நகைகளை திருடுவதையும் 5 பேரும் தொழிலாக வைத்திருந்தனர்.
கைதான 5 பேரில் யோகிஸ் கன்னட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்துள்ளார். இவருக்கு புனித், தினேஷ், ஆகாஷ் போன்ற பல்வேறு பெயர்களும் உண்டு. அவர்கள் 5 பேரும் கொடுத்த தகவலின் பேரில் ரூ.121/2 லட்சம் மதிப்புள்ள 25 மோட்டார் சைக்கிள்கள், ரூ.4 லட்சம் மதிப்புடைய 200 கிராம் தங்க நகைகள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

No comments:
Post a Comment