திமுக - தேமுதிக ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், காரைக்கால் தொகுதி தேமுதிக வேட்பாளர் கே.ஏ.யு. அசனா காயமடைந்தார்.
இத்தகவலை காரைக்கால் காவல்துறையின் முதுநிலை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்றிரவு காரைக்கால் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரிடம், தேமுதிக வேட்பாளர் அசனா தொலைபேசியில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
திமுக ஆதரவாளரான நகைக்கடை உரிமையாளர் இது குறித்து தனது கட்சியினரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, தொலைபேசி பேச்சு குறித்து விசாரிக்க தேமுதிக வேட்பாளரின் வீட்டுக்கு திமுகவினர் சென்றுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த தேமுதிக வேட்பாளர் அசனா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மோதல் தொடர்பாக 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

No comments:
Post a Comment