தமிழக காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து 19 பேரை அதிரடியாக நீக்கியுள்ளார். இதற்கு காங்கிரஸ் பிரமுகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் இரா.சுந்தரராமன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி பொதுச்செயலாளர் மு.முகைதீன் பிச்சை ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘’ தமிழக காங்கிரஸின் முக்கியப்பிரமுகர்கள் கராத்தே தியாகராஜன், எஸ்.வி.சேகர் உட்பட 19 பேரை நீக்கி யும், தொடர்ந்து கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மதிக்காமல் விரோத செயலில் ஈடுபட்டதால் தங்கபாலுவை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிமட்ட உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்கிறோம்’’ என்று அறிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment