2ஜி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள டிபி ரியாலிட்டி நிறுவனத்துடன் மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவாருக்கு தொடர்பு உள்ளது என கார்ப்பரேட் தரகர் நீரா ராடியா தெரிவித்ததாக கூறப்படுவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டிபி ரியாலிட்டி நிறுவனத்தை பவார் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கலாம் என்றும், தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன் சேர்ந்து ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்காக லைசன்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை அவர் நிறைவேற்றி இருக்கலாம் என்றும் சிபிஐயிடம் நீரா ராடியா கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாயின.
இதையடுத்து இது உண்மையல்ல என மத்திய அமைச்சர் பவார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவரது வாக்குமூலம் சிபிஐ குற்றப்பத்திரிகையின் இடம்பெற்றுள்ளது. எனினும் மும்பையில் அறிந்துகொண்டதையே தான் கூறுவதாகவும், தான் கூறுவதற்கு ஆவண ஆதாரம் எதுவும் தன்னிடம் இல்லையென்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

No comments:
Post a Comment